கமு/திகோ/தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம் கடந்த 2017.01.01 முதல் தரம் -10 வரை வகுப்புக்கள் தரம் உயரத்தப்பட்டுள்ளது. திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களது அயராத முயற்சியினாலும், திருக்கோவில் வலயக்கல்வி திரு.ஆர். சுகிர்தராஜன், மற்றும் அதிகாரிகளினது முயற்சியினாலும் இப்பாடசாலையானது தரம் - 10 வரை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் இப் பாடசாலையில் ஏற்கனவே தரம்-11 வரை வகுப்புக்கள் காணப்பட்டும் சிறிது காலம் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இப் பாடசாலையின் தரம் உயர்வுக்கு முயற்சித்த பாரளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை பாடசாலையின் அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் ஒன்றியம் தெரிவித்துக்கொள்கின்றனர்.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!