கடந்த 02.01.2017 அன்று திகோ/ விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயமானது அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. இப் பாடசாலையின் தரம் 1க்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பாடசாலையின் பெயர்பலகை திக்கும் நிகழ்வும் 11.01.2017 இன்று புதன்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.பி.நாதன் தலைமையில் பாடசாலையில் இடம் பெற்றது.இவ் வரவேற்பு நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன், திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ஆர். சுகிர்தராஜன், பிரதிகல்வி பணிப்பாளர் திரு.வை.ஜெயச்சந்திரன், திருக்கோவில் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு.எஸ்.தர்மபாலன், அதிபர் திரு.எம்.அன்ரன் ஆசிரியை திருமதி எஸ்.சண்முகநாதன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

























Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!