Contact Form

Name

Email *

Message *

போத்தல் தாக்குதலுக்குள்ளானவர் உயிரிழப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பின்போது படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த கா…

Image
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பின்போது படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அப்பிரதேசத்தைச் சேர்ந்த கார்த்திகேசு கணேசகுமார் (வயது 23) புதன்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



சிறியதந்தை முறையான கார்த்திகேசு கணேசகுமாருக்கும் அவரது பெறாமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பதாக மாறியதில் சிறியதந்தையை பெறாமகன் போத்தலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தின்போது, கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சிறியதந்தையை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் இந்நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

You may like these posts

Comments