நீர் கட்டணத்தை 30% ஆல் அதிகரிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த அதிகரிப்பை மேற்கொள்வதன் அவசியம் குறித்து, மூவர் அடங்கிய அமைச்சர்களை நியமித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் 01 ஆம் திகதி முதல் நீர் கட்டணங்களை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கடந்த சனிக்கிழமை (12) அறிவித்திருந்தது.
அத்துடன், குறித்த அதிகரிப்பை மேற்கொள்வதன் அவசியம் குறித்து, மூவர் அடங்கிய அமைச்சர்களை நியமித்து ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பில், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் இன்றைய தினம் (15) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு அலகு நீரை சுத்திகரிப்பதற்கு ஆகின்ற செலவை ஈடுசெய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!