
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களும், திருக்கோவில் பிரதேச, பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் அவர்களும், திருக்கோவில் மாவட்ட வைத்தி அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் அவர்களும், பொத்துவில் கோட்டக்கல்வி அதிகாரி வ.ஜெயந்தன், ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார், சட்டதரணி கு.ஜெகசுதன், மற்றும் பாடலுக்கு கருத்துரை வழங்கிய கலாபூசணம் தம்பிமுத்து மகேந்திரா மற்றும் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொது மக்கள் மற்றும் பலரும் இவ் இறுவட்டு வெளியீட்டில் கலந்து கொண்டனர்.
இவ் இறுவட்டின் பாடல் வரிகளினை திரு.எஸ்.கார்த்திகேசு அவர்களும், இசைப்பதிவினை திரு.என்.மோகனராஜு, இவற்றின் ஒருங்கினைப்பாளார் திரு.கா.பிரதீபன் அவர்களும், கலைமணி திருமதி சாந்தினி தர்மநாதன், கலைமாணி திரு.க.சதாநாதன், செல்வன்.எஸ்.சபேசன், செல்வி.எஸ்.சிதுசயோமி ஆகியோர் பாடல்களினை பாடியுள்ளனர். இவற்றுடன் இவ் இறுவட்டு வெளியீட்டிற்கு அனுசரனையினை தம்பிலுவில் ஆர்.என் சீடி கோம்(RN CD Home) வழங்கியுள்ளது.
ஆலய பரிபாலன சபையினர் இவ் இறுவட்டின் பாடல் வரிகளினை திரு.எஸ்.கார்த்திகேசு, இசைப்பதிவாளர் திரு.என்.மோகனராஜு, மற்றும் ஒருங்கினைப்பாளார் திரு.கா.பிரதீபன், பாடகர்கள், மற்றும் அனுசரனையாளர்கள் தம்பிலுவில் ஆர்.என் சீடி கோம்(RN CD Home) உரிமையாளர் என்.ஏ.லோஜன் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அதிதிகள், பொது மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றனர்.