திருக்கோவில் தபாற்கந்தோருக்கு அருகாமையிலுள்ள மாடி வீடு ஒன்றினை உடைத்து கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள், மட்டக்களப்பு ஆரையம்பகுதிப் பிரதேசத்தில் அநாதரவான நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டை, கடந்த செவ்வாய்க்கிழமை (26) இரவு உடைத்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 24 இலச்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டை, கடந்த செவ்வாய்க்கிழமை (26) இரவு உடைத்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 24 இலச்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று (28) இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவ் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசரணைகள் இடம்பெற்றுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!