Contact Form

Name

Email *

Message *

தனது பயனர்களுக்கு அப்பிள் நிறுவனம் விடுத்த உடனடி எச்சரிக்கை

நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாகஇருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக்காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவி…

Image
நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்விற்கு ஆரோக்கியமானதாகஇருக்கின்ற போதிலும், அதனூடாக தமது கைவரிசையைக்காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்வாறானபிரச்சினைகள் அதிகளவில் இணைய வலையமைப்பு, தொலைபேசிவலையமைப்புக்களில் இடம்பெறுவதை காணலாம்.
தற்போது இப் பிரச்சினை புதிய வடிவில் அப்பிள் பயனர்களை குறிவைத்துள்ளது.
அதாவது அப்பிள் சாதனங்களை பயன்படுத்தும்போது அவற்றிற்கு தனியான Apple ID உருவாக்கப்பட வேண்டும்.
அவ்வாறு உருவாக்கினால்தான் குறித்த சாதனத்தின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க முடியும்.
இதை நன்கு அறிந்துகொண்ட ஹேக்கர்கள் நூதனமான முறையில் குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்புகின்றனர்.
அதில்“உங்கள் Apple ID செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துவிட்டது, அதனை தடுப்பதற்கு பின்வரும் இணைப்பில் சொடுக்கவும்”என்று இணைப்பும் ஒன்று தரப்பட்டுள்ளது.
ஆனால் இதில் கிளிக் செய்து Apple ID ஐ புதுப்பிக்க முயலும்போது தனிப்பட்ட தரவுகள், அல்லது பணம் பறிபோவதற்கான சாத்தியம் இருப்பதாக அப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனவே அவ்வாறான குறுஞ்செய்திகளை தவிர்க்குமாறு தனது பயனர்களுக்கு அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான குறுஞ்செய்திகள் ஐக்கிய இராச்சியத்திலுள்ள சிலபயனர்களை சென்றடைந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You may like these posts

Comments