Contact Form

Name

Email *

Message *

பேஸ்புக் ​தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பேஸ்புக் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியி…

Image
பேஸ்புக் தொடர்பில் கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 650 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருவருடைய நிழற்படத்தைப் பயன்படுத்தி மற்றுமொருவர் போலி கணக்கு திறந்துள்ளமை குறித்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துவருவதாக கணனி துரித நடவடிக்கைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பேஸ்புக் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்வதன் ஊடாக போலிக் கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
இதுதவிர இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவிற்கும் முறைப்பாடு செய்வதன் ஊடாக உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You may like these posts

Comments