அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் களுதாவளை பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை 04 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பொத்துவில், அருகம்பை சுற்றுலாப் பிரதேசத்துக்குச் சென்று விடுமுறையைக் கழித்துவிட்டு சம்மாந்துறைப் பிரதேசத்துக்கு வீடு திரும்பிக்கொண்டு இருந்த வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருவர் உட்பட விபத்தில் படுகாயமடைந்த ஒன்பது பேரும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தனால் துரிதகதியில் சிகிச்சைகள் அளிப்பட்டதுடன், இரு பெண்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரித்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!