திருக்கோவில் பிரதேசத்தின் வினாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள நாவுக்கரசர் தொழில்நுட்ப கல்வி நிலையத்தில் கடந்த 2015.10.27 செவ்வாய்க்கிழமை அன்று கல்வி நிலையத்தில் கணணி பிரயோகம் மற்றும் சிங்கள மொழி பாடநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கல்வி நிலைய பணிப்பாளர் திரு கே.ஹரிசெல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு S.ஜெகராஜன், திருக்கோவில் கோட்ட கல்வி பணிப்பாளர் திரு V.ஜெயந்தன் மற்றும் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு கண.இராஜரத்தினம், திருநாவுக்கரசு நாயனார் குருகுல செயலாளர் திரு P.சந்திரேஸ்வரன் ஆகியோரும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், நலன்விரும்பிகள் போன்றோரும் கலந்துகொண்டனர். இன் நிகழ்வில் பாடநெறியினை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு ACCIS International Campus இன் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






