Contact Form

Name

Email *

Message *

மரம் நடுகை நிகழ்வு

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தேசிய மரநடுகை வாரத்தினை முன்னிட்டு இன்று திருக்கோவில் சாகாம் கிராமத்தில் மரங்கள் வைபவ ரீதியாக நடப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், திருக…

Image
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் தேசிய மரநடுகை வாரத்தினை முன்னிட்டு இன்று திருக்கோவில் சாகாம் கிராமத்தில் மரங்கள் வைபவ ரீதியாக நடப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் மற்றும் கணக்காளர் எம்.அரசரெத்தினம், சமூர்த்தி முகாமையாளர் வி.அரசரெத்தினம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


இங்கு உரையாற்றிய உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், ஒரு நாட்டில் உண்மையான அழகும் வளமும் இயற்கை வனப்புக்களாகும்.இது தற்போது மனிதர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகத்தான் பருவகால மழை வீழ்ச்சிகள் ஒழுங்குகள் மாற்றமடைந்து வருவதுடன் இயற்கை அழிவுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. 

இதனை மக்கள் புரிந்து கொண்டு காடுகளை அழிப்பதை விடுத்து மரங்களை நட்டு நாட்டில் இயற்கை அழகையும் வளங்களையும் பேணி பாதுகாப்பதுடன் மனிதர்களும் ஏனைய உயிர் இனங்களும் இயற்கை அழிவுகளில் இன்றி நலமாக வாழ முடியும் என்றார்.

You may like these posts