Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் 1வது பொங்கல் விழா

திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் காயத்திரி கிராம கிளையின் ஏற்பாட்டில் இளைஞர் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து நடாத்தும் 1வது பொங்கல் விழா நிகழ்வானது 24.01.2017  செவ்வா…

Image

திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் காயத்திரி கிராம கிளையின் ஏற்பாட்டில் இளைஞர் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து நடாத்தும் 1வது பொங்கல் விழா நிகழ்வானது 24.01.2017  செவ்வாய்க்கிழமை இன்று SVO கிளையின் தலைவர் திருமதி.ரி.சிவநேசம் தலைமையில் இடம்பெற்றது.

இன் நிகழ்வானது விநாயகபுரம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ.கிருபாகரசர்மா ஐயா அவர்களின் ஆசியுடன் ஆரம்பமான நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண ஜெர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் பணிப்பாளர்  திரு.கே.ஜெயசிறில் அவர்களும் விசேட அதிதிகாளாக தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.கண.இராசரெத்தினம், திருக்கோவில் சுகாதார பணிமனையின் பொதுத்தாதிய சகோதரி திருமதி.கே.சிவமலர், திருக்கோவில் நான்கு கிராம அலுவலர் திரு.ரி.சுகிர்தராஜன் மற்றும் திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியத்தின் ஸ்தாபகர் திரு.பி.நந்தபாலு கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகாளாக  திருக்கோவில் நான்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கே.கலைமாறன்,  திருக்கோவில் நான்கு கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.கே,சிவநேசராசா, விநாயகபுரம் ஒன்று கிராம உத்தியோகத்தர் திரு.என்.நிரோஜன் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை முன்னாள் உப தலைவர் திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அதிதிகாளாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதில் இளைஞர் மற்றும் சிறுவர் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.























You may like these posts

Comments