Contact Form

Name

Email *

Message *

சட்டத்தரணி ஜெகனின் 10 (பத்து) அம்சத்திட்டம்

என் உயிரிலும் மேலான வாக்காளப்பெருமக்களே! இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்புதிய அரசு அமைப்பதற்கான தேர்தல்எதிர்வரும் ஆகஸ்ட்-17ல் நடைப…

Image
என் உயிரிலும் மேலான வாக்காளப்பெருமக்களே!




















இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்புதிய அரசு அமைப்பதற்கான தேர்தல்எதிர்வரும் ஆகஸ்ட்-17ல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலானது இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் இருப்பைப்பாதுகாக்கும் வகையில் அமையவுள்ளதால்சிறுபான்மை மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டிய நிலையிலுள்ளனர். இதில் குறிப்பாகவடகிழக்கு தமிழ் மக்களினதும், முஸ்லீம் மக்களினதும்,அரசியல் அதிகார இருப்பை உறுதிப்படுத்த அவ் இனம்சார் கட்சிகளின்செயற்பாடுகள் மிகத் தீவிரமாகவுள்ளதனை அறிய முடிகின்றது. இந்தப் பாராளுமன்ற பொதுத் தேர்தலானதுகுறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அரசியல் வாழ்வியல் இருப்பை உறுதிப்படுத்தவேண்டிய அவசியம் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களைச் சேர்ந்ததாகும். அம்பாறைமாவட்ட மக்கள் மூன்றாவது சிறுபான்மை இனமாக உள்ள நிலையில் தங்களது இனத்துவ இருப்பை உறுதிப்படுத்தும்வகையில் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.

அம்பாறை மாவட்ட மக்கள் தமது உரிமையைவென்றெடுக்க வேண்டுமாயின் தமதுமதத்துவ, பிரதேசத்துவ, சாதித்துவவேறுபாடுகளை மறந்தும் பேரினவாதக்கட்சிகளினூடக எமது மக்களின் வாக்குகளைசிதைக்க முனையும் சிறுபாண்மைத்தனவேடதாரிகளை ஓரங்கட்டி, வீறுநடைபோடவேண்டியது காலத்தின் கட்டாயத்தேவையாகும்.அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின்மொத்த வாக்குகள் சுமார் 83000 ற்குஉட்பட்டதாகவுள்ளது. இதில் 80% ற்குமேற்பட்ட வாக்குகளை ஒரே கட்சிக்குசெலுத்துவதன் மூலம் நாம் தமிழ்பிரதிநிதித்துவம் இரண்டு பேரைத் தெரவுசெய்யக்டகூடிய ஆளுமையும், வல்லமையும்கொண்டவர்களாக மாறுவோம். இந்த மாற்றம்எம் ஒவ்வோருவரினதும் உள்ளத்தில்மிளிரவேண்டும்.பீனிக்ஸ் பறவை போல் உள்ளத்தில்அலையாக கொதித்துக் கொண்டிருக்கும் 30வருட போரியல் தந்த பேரிடர் இன்னும்மறையாத இந்நிலையில் எம்மை விட்டுச்சென்ற புனித ஆத்மாக்களிற்கு நாம்செய்யும்ஆறுதல் நமது அரசியல் இருப்பை தக்கவைத்து , எம்மவர்களின் சந்ததியின்உறுதியான வாழ்விற்கு வலுச்சேர்ப்பதேஇதற்காக எம்மக்கள் ஒன்று பட்டு வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிப்போம்.அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மக்களைஒன்றிணைத்து அவர்களை வழிநடத்திச்செல்லக்கூடிய ஆற்றல், ஆளுமை மிக்கதலைமைத்துவம் ஒன்று அவசியமாகின்றது.இவ்வளவு காலமும் நடந்த தேரிதல்களில்அவ்வாறான தலைமைத்துவம் இல்லாதுபோனதால் நாம் பட்ட துன்பம் சொல்லில்அடங்கா. இதனை போக்கும் வகையில்தம்பிலுவிலைச் சேர்ந்த பரம்பரைத் தமிழ்தேசியப் பற்றுறுதி மிக்க குடும்பத்தில் இருந்து சட்டத்தரணி சிந்தாத்துரை ஜெகநாதன் இலக்கம் 10 இல் இம்முறை தேர்தலில்களமிறங்கியுள்ளார்.

அம்பாறை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும்பல்வேறுபட்ட விடயங்களை அறிந்துஅதற்கான சட்டரீதியானநடவடிக்கைகளையும் எடுத்து வந்தவர். இதன்மூலம் மக்களின் பிரச்சினைகளைநேரடியாகவும், சட்டரீதியாகவும் முன்கொண்டு செல்லக் கூடிய ஆளுமை கொண்டசட்டப்புலமையாளர்.

இவரின் தலமைத்துவமானது அம்பாறைமாவட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்கும் போதுஎமது மாவட்ட மக்கள் எதிர்நோக்கும்அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்வெற்றியூடாக இவரைப் பாராளுமன்றம்அனுப்புவோம்.

அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின்தற்போதைய அடிப்படைப் பிரச்சினையாகஇனங்காணப்பட்ட விடயங்களில்சட்டத்தரணி திரு.ஜெகநாதன் அவர்களின் 10அம்சத்திட்டங்களாக,

1. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின்பிரதேச எல்லைப் பிரச்சினை.
2. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின்காணிப்பிரச்சினை. (மல்வத்தை, விநாயகபுரம், பொத்துவில்,நீலாவனை, ஊரணி நாவிதன்வெளி,வட்டமடு, கோமாரி, பாணமை )
3. கல்முனை தழிம் பிரதேச செயலகம்தரமுயர்த்தல் .
4. சம்மாந்துரை, நாவிதன்வெளி, காரைதீவு,கல்முனை இணைந்த தமிழ்பாடசாலைகல்வி வலயம்.
5. வட்டமடு மேய்ச்சல் காணிதொடர்பான பிரச்சினை .
6. தமிழ் மக்களின் வாழ்வாதார எழிச்சிவேலைத்திட்டம் .
7. விதவைகளின் வாழ்வாதாரசெயற்பாடுகள்.
8. ஆரம்ப, இடைநிலை, வர்த்தகதொழில் கல்வி மேம்பாடுகள்.
9. விவசாய, கால்நடை, மீனவர்களின்தொழில்மேம்படுத்தல்.
10. இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள்.

2012-2015வரைவெளியான பட்டதாரிகள் உட்படயுத்தத்தில் காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்தலும், ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வளித்தல்.

இவ்வாறான பல்வேறுபட்டபிரச்சினைகளுக்குரிய விடயங்களைமுதன்மைப்படுத்தி மேற்படி 10விடயங்களையும் முன்னெடுத்துச்செல்வதற்கும், அதனூடாக எமது மக்களின்இருப்பை உறுதி செய்வதற்கும் உங்கள்வாக்குகளை வீட்டிற்கும், 10 ம்இலக்கத்திற்கும் செலுத்துவதன் மூலம்நிலைநிறுத்தலாம்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள்தமது ஆளுமை, ஆற்றலை மேம்படுத்தசரியான தெரிவை நாம் தேர்ந்தெடுக்காதுவிட்டால் கடந்த முறை தேர்தலில் விட்டதவறுகளை மீண்டும் செய்து, எமது கண்களைநாமே குத்தியவர்கள் என்றநிலைக்குத்தள்ளப்படுவோம்.

எனவே இராஜதந்திர பொறிமுனைக்குள்அகப்பட்டிருக்கும் எம்மவர்களின்உரிமைகளை மீட்டெடுத்து, அதிகாரத்தைவலுப்படுத்தி, கௌரவமான அரசியல்தீர்வொன்றினை பெற்றெடுத்து, எமது மக்கள்தம்மைத் தாமே ஆளும் சூழழை உருவாக்கி,தமிழரின் அரசியல் பலமான தமிழ் தேசியகூட்டமைப்பினை மேலும் பலப்படுத்தவேண்டியது உண்மைத்துவமான தன்மானத்தமிழனின் தலையாய கடமையாகும்.

"வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்".

சிந்தாத்துரை ஜெகநாதன்( LLB
சட்டத்தரணி சொலிசிற்றர் & பரிஸ்டர்)

You may like these posts