Contact Form

Name

Email *

Message *

சாத்தியமில்லாத போலி வாக்குறுதிகளினை தேடித் தேடி வந்து கூறி ஏமாற்றவிரும்பவில்லை - வேட்பாளர் ஜெகநாதன்

ஏனைய வேட்பாளார் போல் சாத்தியமில்லாத போலி வாக்குறுதிகளினை தேடித் தேடி வந்து கூறி ஏமாற்றவிரும்பவில்லை உங்களுக்கான சிறந்த தொலைநோக்குடன் கூடிய பயணத்தினை மேற்கொள்வேன் என அம்பாறை ம…

Image
ஏனைய வேட்பாளார் போல் சாத்தியமில்லாத போலி வாக்குறுதிகளினை தேடித் தேடி வந்து கூறி ஏமாற்றவிரும்பவில்லை உங்களுக்கான சிறந்த தொலைநோக்குடன் கூடிய பயணத்தினை மேற்கொள்வேன் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் சிந்தாத்துரை ஜெகநாதன் தெரிவித்தார் .

தம்பிலுவில் எதிரொலி விளையாட்டு கழக உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
தமிழ் தேசிய விடியலுக்கான பயணத்தில் அதிகூடிய பங்காளிகள் எமது இளம் வீரப்புதல்வர்கள் எம்மவர்கள் எமது சுயநிர்ணய உரிமைக்காக பல்வேறு ஆயுதப் போரட்டங்களில் ஈடுபட்டு தங்களது வீரத்தினை எடுத்துக் காட்டினர் இதற்காக சொல்லொன்னா துயருடன் எம்மவர்களினை விடுதலை வித்துக்களாக விதைத்துள்ளோம் ..இவ்வறான இழப்புக்கள் இனி மேலும் ஏற்படக்கூடாது என்பதற்காக த.தே.கூட்டமைப்பு தங்களது ஜனநாயக போராட்டத்தில் பல முன்னெடுப்புக்களுடன் போராடி வருகின்றனர் .

காலம் காலமாய் தமிழினத்தின் அரசியல் பயணத்தில் முதுகெலும்பாக காணப்படுகின்ற எம் இளம் சமூகம் இன்று தொலைநோக்கோ ,சமூகநோக்கோ இல்லாமல் தனிப்பட்ட பேராசை ஒப்பந்தநோக்கங்களுடன் ஒரு சில வேட்பாளர்களும் இவர்களினை பகடைக்காய்களாக பயன்படுத்தி இலகுவில் தங்களது சுயநல கருமங்களினை மேற்கொள்ள நினைக்கின்ற புத்திஜீவிகளும் இணைந்து இன்று அவர்களது போலியான வாக்குறுதியுடன் உசுப்பேத்தல் பேச்சுக்களாலும் கழகங்கள் ,சங்கங்கள் என சென்று மூளை சலவை செய்து உங்களினை ஏமாற்றுகின்றதை பார்கும் போது மிகவும் மனம் வேதனையடைகின்றது.

ஏனைய வேட்பாளார் போல் சாத்தியமில்லாத போலி வாக்குறுதிகளினை தேடித் தேடி வந்து கூறி ஏமாற்றவிரும்பவில்லை உங்களுக்கான சிறந்த தொலைநோக்குடன் கூடிய பயணத்தினை மேற்கொள்வேன் ..உள்நாட்டுகல்வி ,வெளிநாட்டுக்கல்வி சிறந்த கல்விக்கேற்ற அரச மற்றும் தனியார் ,வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் , எமது மாவட்ட இளம் சமூகங்களுக்கான அவசியமான திட்டங்கள் என்னால் வகுக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக ஒவ்வொரு குடும்பதிலும் ஒவ்வொரு வேலைவாய்பை பெற்று தருவதற்கான முனைப்பும் அக்கறையும் என்னிடம் உள்ளது .

மேலும்அனைவருக்கும் கல்வி மிகப்பெரிய முயற்சியாகும். 13 வருடகாலம் ஏட்டுக்கல்வியில் தமது காலத்தை செலவழித்த மாணவ்களுக்கு கானல் நீராகும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்பு பல்கலைக்கழகம் போக முடியாத நிலையில் வாழ்வே இல்லை என மனம் தளரும் மாணவர்களுக்கு வெளி நாட்டு பல்கலைக் கழகங்களோடு கற்றல் தொடர்பினை ஏற்படுத்தி தமது கல்வி வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்ய புது திட்டம் அமைக்க தீர்மானங்கள் பல .உறுதியளிக்கின்றேன் ஒத்துழையுங்கள்.

You may like these posts

Comments