Contact Form

Name

Email *

Message *

வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகள் - பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி உலக போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். இதனால் நாடு முழுவதும் நாளை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இந் நட…

Image
வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி உலக போதைப்பொருள் ஒழிப்பு தினமாகும். இதனால் நாடு முழுவதும் நாளை சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இந் நடவடிக்கைகள் தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தினத்தினையிட்டு போதைப் பொருளிலிருந்து  பிள்ளைகளையும், ஏனைய சிறுவர்களையும் பாதுகாத்துக் கொள்வது தொடர்பில் விழிப்புணர்வை எற்படுத்தும் வகையில் சகல இடங்களிலும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு 26 ஆம் திகதி விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு பொது மக்களை பாடசாலை மட்டத்திலும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மூலமாகவும் தெளிவூட்டும்  நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுகளில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஊடாக இந்த நடவடிக்கைகள் மேற்கொளளப்படவுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் பொலிஸ்மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுற்றிவளைப்புகள் தொடர்பான செயற்பாடுகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டு தற்போது அவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You may like these posts