திருக்கோவில் பிரதேச சபையின் புதிய கட்டடம் மற்றும் புதிய சந்தைத்தொகுதி திறப்பு விழா, புதன்கிழமை நடைபெற்றது.
பிரதேச சபையின் தவிசாளர் வி.புவிதராஜன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீ.தயாரத்ன, தமிழ் தேசிய கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். சீ.யோகேஸ்வரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.ராஜேஸ்வரன், ரீ.கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.