Contact Form

Name

Email *

Message *

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் இன்றைய நிலை.........?

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் இன்றய நிலை.........? திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் பணி புரியும் தாதியர்களின் அசமந்த போக்கின் காரணமாக நோயாளிகளும், அவர்களின் உறவ…

Image

 திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையின் இன்றய நிலை.........?


திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் பணி புரியும் தாதியர்களின் அசமந்த போக்கின் காரணமாக நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அசெளகரியப்படும் ஓர் நிலமை காணப்படுகின்றது. நோயாளி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் சந்தர்பத்தில் அவசர சிகிச்சைபிரிவில் பணி புரியும் தாதியர்கள் பிரதேச வைத்திய அதிகாரி (DMO) வரும் வரை நோயாளிக்கு முதலுதவி வழங்குவதையிட்டு அந்த நேரத்தினை தங்களது தேவைக்காக பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளியின் நிலை.......?


இதனால் நோயாளிகளின் உறவினர்களுக்கும், உத்தியோகஸ்த்தர்களுக்கும் வாக்குவாதங்கள் இடம்பெறும்  நிலை காணப்படுகின்றது.இவ்வாறான சந்தர்ப்பங்கள் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் நிலவுவதால் மக்கள் தங்களது தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு செல்லும் ஓர் கவலைக்குரிய நிலையும் காணப்படுகின்றது.

தாதியர்கள் ஒரே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த நிலை தொடரும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.ஆகவே இதற்கான நிரந்தர தீர்வினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்தரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.                                                              

You may like these posts