Contact Form

Name

Email *

Message *

தாண்டியடி ஆரம்ப பிரிவு வைத்தியசாலை மக்களின் சேவைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டது

திருக்கோவில் பிரதேசத்தில் தாண்டியடி கிராமத்தில் பிரதான வீதியில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு வைத்தியசாலை திறந்து மக்களின் சேவைக்காக  கையளிக்கும் நிகழ்வு 10.05.2019 திகத…

Image


திருக்கோவில் பிரதேசத்தில் தாண்டியடி கிராமத்தில் பிரதான வீதியில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு பிரிவு வைத்தியசாலை திறந்து மக்களின் சேவைக்காக  கையளிக்கும் நிகழ்வு 10.05.2019 திகதி இன்று வெள்ளிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவூடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து கொண்டு அவர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இவ் வைத்தியசாலையானது தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் 10மில்லியன் நிதி அனுசரனையுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டுக்காக ஒன்றினைவோம் எனும் ஜனாதிபதியின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இன்று  மக்களின் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல்.அலாவூடீன்,  திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜன், திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி சு.இராஜேந்திரா, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.பி.சீலன், கிராம நிருவாக உத்தியோகத்தர் கண.இராஜரெத்தினம், மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.


இவ்வைத்தியசாலையானது கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைப்பதாகவே இன்று வெள்ளிக்கிழமைகாலை(10) ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு இருந்த நிலையில் இறுதி நேரத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் விஜயம் இரத்து செய்யப்பட்டு இருந்துடன்

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் அவர்கள் பேசுகையில் கௌரவ ஆளுநர் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என மிகவும் விருப்பத்துடன் இருந்தார் ஆனால் இன்று தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது போனதாகவும் அவர் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.






































You may like these posts