அம்பாறை மாவட்ட இந்து சுயம்சேவக சங்கத்தின் தம்பிலுவில் கிளையின்
அனுசரணையுடன், இன்று 27ஆம் திகதி திங்கட்கிழமை. தம்பிலுவில் சித்தி
விநாயகர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் இடம்பெற்றது.
ஓதுவார்களும் அடியவர்களும் இதிற் கலந்துகொண்டு திருவாசகம் ஓதியதுடன், ஆலயத்தில் அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஓதுவார்களும் அடியவர்களும் இதிற் கலந்துகொண்டு திருவாசகம் ஓதியதுடன், ஆலயத்தில் அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
திருவெம்பாவை நோன்பு
கடந்த பத்துதினங்களாக இடம்பெற்று வருவதை முன்னிட்டு, தம்பிலுவில் தாழையடி சிவனாலயம்,
பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயம் என்பவற்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 23ஆம் திகதியும்,
தம்பட்டை ஆறுமுகசுவாமி ஆலயத்தில் நேற்று புதன்கிழமை 26ஆம் திகதியும், திருவாசக முற்றோதல்
நடத்தப்பட்டு வருகின்றமை ஈண்டு குறிப்பிடத்தக்கது.