திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 3 வருடங்களாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் 5 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.அத்துடன், இவர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 16 ½ பவுண் தங்கநகைகள், 35,000 ரூபா பணம், 6 கையடக்கத் தொலைபேசிகள், எல்.சி.டி. ரக தொலைக்காட்சிப்பெட்டி ஒன்று, கணினி உள்ளிட்டவற்றையும் இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும்; கைப்பற்றியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக நபர்கள் கடந்த 3 வருடங்களாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள வீடுகள் மற்றும் பாடசாலைகளை உடைத்து கொள்ளையிட்டு வந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்தச் சந்தேக நபர்களை வீடுகளில் கைதுசெய்துள்ளதாகவும் 18 முதல் 20 வயது வரையானவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.






