(திருக்கோவில் தம்பி)
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காஞ்சிரன்குடா சந்தியில் நேற்று மாலை 7.00 மணியளவில் இலங்கை போக்கு வரத்துக்குச் சொந்தமான பஸ்ஸீம் ஆட்டோவும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவருமே காயமடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.பொத்துவில் பகுதியில் இருந்து வந்த ஆட்டோ வேககட்டுப்பாட்டை இழந்த நிலையில் பஸ்ஸீடன் மோதியதாக பொலிசாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.இவ்விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
