இவ்வாரம் வெளியாகிய உயர் தரப் பரீட்சை முடிவுகளின்படி அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷணா தேசிய பாடசாலையின் மாணவி தணிகாசலம் தர்ஷிகா உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3ஏ சித்திபெற்று மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நான்காவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும் அம்பாறை மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவி அக்கரைப்பற்று - 7/3ம் கிராம சேவகர் பிரிவிலுள்ள நாவலர் வீதியில் வசிக்கும் அதிபர் தணிகாசலம் குமுதா தம்பதியினரின் இரண்டாவது புதல்வியாவார்.
சித்தி பெற்ற மாணவியை கௌரவிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச் பியசேன மாணவியின் இல்லத்துக்கு இன்று (2013.01.31) காலை விஜயம் செய்து மாணவியை வாழ்த்தியதுடன் நினைவுப் பரிசும் வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரீ.ஜெயாகர், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் வி.சுகிர்தகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



