(திருக்கோவில் தம்பி)
திருக்கோவில் பிரதேசத்தில் காட்டு யானைகளின் தொல்லைகள் மிக நீண்ட காலமாக விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் பல விதமான பாதிப்புக்களையும் உயிர் இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இவ் பிரச்சணைக்கு தீர்வு காணும் நோக்குடன் கடந்த (2) திகதி புதன்கிழமை தம்பிலுவில் கமநல சேவைக் கட்டிடத்தில் வைபவ ரீதியாக வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம் குடியேற்ற கிராமங்களான தங்கவேலாயுதபுரம் ,கஞ்சிகுடியாறு,தாண்டியடி சாகாமம் ,காஞ்சிரம்குடா போன்ற காட்டை அண்டி பிரதேசங்களில் வாழ்விடங்களையும் விவசாயத்தையும் மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பு நலநனை கருத்தில் கொண்டு திருக்கோவில் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் அவர்களின் வேண்டுகோளுங்கினங்கவும் அம்பாறை மாவட்ட ஐனாதிபதியின் இணைப்பாளர் கே.புஸ்பகுமார்(இனியபாரதி) அவர்களின் முயற்சியின் பயனாகவும் கிழக்கு மாகாண வனவிலங்கு பாதுகாப்பு உதவிப் பணிப்பாளர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இவ் வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ் அலுவலகத்தில் விவசாயிகள் தமக்கு வேண்டிய யானை விரட்டி மற்றும் யானைகளால் ஏற்படும் பாதிப்புக்கள் உயிர் இழப்புக்கள் போன்றவற்றுக்கான இழப்பிடுகள் பொற்றுக்கொள்ள முடியும் அத்துடன் மின்சார வேலிகள் அமைத்தல் போன்ற சேவைகளும் இவ் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இவ் அலுவலக திறப்பு விழா வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகத்தின் அதிகாரி ஏ,ஏ,ஹலீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண வனவிலங்கு பாதுகாப்பு உதவிப் பணிப்பாளர் சட்டத்தரணி டபிள்யூ.ஏ.லலித்குமார அவர்களும் விசேட அதிதிகளாக வீ.நவிரதன் அம்பாறை மாவட்ட ஐனாதிபதியின் இணைப்பாளர் கே.புஸ்பகுமார்(இனியபாரதி) கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். சிதம்பரநாதன் மற்றும் பல கௌரவ அதிதிகளும் கலந்து கொண்டு இவ் வனவிலங்கு பாதுகாப்பு உப அலுவலகத்தினை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
