(திருக்கோவில் தம்பி).
தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டத்தின் மூலம் திருக்கோவில் பிரதேச செயலக சமூர்த்தி பிரிவால் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி பெறும் 82பயனாளிகளுகளுக்கு 8200000 (எண்பத்திரெண்டு லட்சம்) வீடு கட்டுவதற்கான நிதிகள் 04(வெள்ளி) வழங்கப்பட்டன.
இவ் நிதி வழங்கும் நிகழ்வானது சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம் அவர்களின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வீடு கட்டுவதற்கான நிதிகளை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் பி.எச் பியசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சமூர்த்தி பெறும் 82பயனாளிகளுகளுக்கு நிதிகளை வழங்கி வைத்ததார். இவருடன் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் கண.இராஐரெத்தினம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கயும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
