Contact Form

Name

Email *

Message *

மண்டானை குடியேற்ற கிராமத்திற்கு பாடசாலை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

அசுமன். அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டானை எனும் குடியேற்ற கிராமத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் அங்கு புதிய பாடசாலை ஒன்றை…

Image

 அசுமன்.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டானை எனும் குடியேற்ற கிராமத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் அங்கு புதிய பாடசாலை ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட கிராம மட்ட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மண்டானை பல்தேவைக் கட்டடத்தில் இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சின்னத்தம்பி விக்னேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, செயலாளர் ரீ.ஜெயாகர், முன்னாள் கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான எஸ்.நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன,

'கடந்த சுனாமி அனர்த்தத்தனால் பாதிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்களின் உதவியினால் வீடுகள் அமைத்து குடியேற்றப்பட்டு தற்போது 252 குடும்பங்கள் இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இக்குடும்பங்களின் 155க்கு மேற்பட்ட பிள்ளைகள் பாடசாலை செல்பவர்களாகும்.
இவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்து திருக்கோவில் பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு சென்று கல்வி கற்று வருகின்றனர். தமது பொருளாதார கஷ்டம் காரணமாக கூடுதலான மாணவர்கள் கல்விகற்கின்ற வயதில் பாடசாலையை விட்டு இடைவிலகியுள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு இப்பிரதேச மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இப்பிரதேசத்தில் எதிர்வரும் ஆண்டில் புதிய பாடசாலை ஒன்று இந்த பல்தேவைக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்படும. அதற்கான சகல நடவடிக்கைகளையும் கல்வியமைச்சுடன் பேசி மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்தார்.

You may like these posts