உலகெங்கும் வாழும் சைவர்களால் அனுட்டிக்கப்படும் திருவெம்பாவை நோன்பானது கடந்த டிசம்பர் 18ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்நாட்களில் அதிகாலையில் ஓதுவார்கள் திருப்பள்ளியெழுச்சி பாடி ஊர்வலம் செல்வதும், அடியவர்கள் வைகறைப் பூசையில் கலந்துகொண்டு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் பாடல்களைப் பாடுவதும் வழமையாகும்.
படங்கள்: தாழையடி சிவனாலயத்தில்
இடம்பெற்ற பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்.
நோன்பின் ஆறாம்
நாளான நேற்று 24ஆம் திகதி திங்கட்கிழமை, ஆலயங்களில் “பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்”
இடம்பெற்றது.
இறைவன் தன் அடியவர்கள்
மீது கொண்ட தூய அன்பையும் எல்லா உயிர்களிலும் அவன் நீக்கமற நிறைந்திருப்பதையும் உணர்த்தும்
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை நினைவுகூர்வதற்காக, திருவெம்பாவை நோன்பு காலத்தில்,
இத்திருவிளையாடல், ஆலயங்களில் நடித்துக் காட்டப்படுவது வழமையாகும்.
தம்பிலுவில் தாழையடி
சிவனாலயம், திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம், தம்பிலுவில் சித்திவிநாயகர் ஆலயம்
உள்ளிட்ட சைவாலயங்களில் இந்நிகழ்வானது நேற்றுக் காலை மிகச்சிறப்புற இடம்பெற்றது.










