(அ.சுமன்.)
ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், இன்று தேசிய பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று விஷேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் ஆழிப்பேரலைக்குப் பலியானோரை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிடங்களில் மௌன அஞ்சலி நடைபெற்றது.
