அமரர் எஸ். டி. அரசரெத்தினம் ஆசிரியர் நினைவாக....
ஆடியமாவாசை வேலவா... பக்திப் பாடல்கள்..
ஆடியமாவாசை வேலவா... பக்திப் பாடல்கள்..
வணக்கம் அன்பான உறவுகளே!
உங்களுக்கு தெரியும் எமது ஊர்
பகுதிகளில் உள்ள முருகன்,
பிள்ளையார், அம்மன் கோவில்களுக்கு அந்தந்தத் தலங்கள் பற்றியும்,சிறப்புகள் பற்றியும், வரலாறுகள் பற்றியும், எழுந்தருளிகள் பற்றியும்எமது மூத்த கலைஞர்களான இரா. தெய்வராஜன், கோவிலூர் செல்வராஜன்ஆகியோரால் பல பக்திப்பாடல் குறுந்தட்டுகள்வெளியிடப்பட்டன. இந்தப்
பாடல்களை இவர்களுடன், அமரர் சங்கீத பூசணம் எஸ்.கணபதிப்பிள்ளை,
திரு. எஸ்.பி. கனகசபாபதி ஆகியோரும் இயற்றி இருந்தார்கள். இதுவரை
ஐந்து இசைத்தட்டுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் அவை முறையாகஎமது மக்களிடம் சென்றடைந்தனவா என்றால் இல்லை. ஆனால் அவை எமதுகோவில்களிலே ஒலிக்கின்றன.
இம்முறை எதிர்வரும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி தீர்த்தோற்சவத்தைமுன்னிட்டு "ஆடியமாவாசை வேலவா" என்ற பக்திப் பாடல் இசை தட்டு வெளியிடப்படஇருக்கின்றது. அமரர் எஸ், டி. அரசரெத்தினம் அவர்களின் நினைவாக அவரது அன்பு புதல்வன்திரு. உத்தரகுணசீலன் (ராஜன்) அவர்கள் தயாரித்து வழங்குகின்றார். இம்முறை இந்தஇசைத்தட்டை தம்பிலுவில் இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன் மிக சிறப்பாகவெளியிட திரு. ராஜன் அவர்கள் தயாராகின்றார். இதற்காக இந்துமாமன்ற தலைவர்திரு வன்னியசிங்கம்.ஜெயந்தன் அவர்களுடனும், இணைப்பாளர் திரு.எஸ். பார்த்திபன்அவர்களுடனும் கலந்தாலோசிக்கப்பட்டிருக்கிறது.
எதிர் வரும் யூலை 15 ம் திகதி இந்த வெளியீட்டு விழா நடைபெறும். இந்த விழாவைசிறப்பிக்குமுகமாக எமது மூத்த கலைஞர்களான கோவிலூர் செல்வராஜன், தெய்வராஜன்
இரட்டையர்கள் மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின் ஊரில் ஒரே மேடையில் இணைகிறார்கள்.விழாவில் தயாரிப்பாளர் திரு. ராஜன் அவர்களும் கலந்து, தனது தந்தைக்கு பெருமை சேர்க்கிறார்.
நிகழ்வின்போது இசை நிகழ்ச்சியும் இடம்பெறலாம். மக்களே காத்திருங்கள்.