Contact Form

Name

Email *

Message *

சாகாமம் கிராமத்துக்கான குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பம்

சாகாமம் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிப்புற்று இடம்பெயர்ந்து  மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்துக்கான ஆரம்ப வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக…

Image


சாகாமம் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிப்புற்று இடம்பெயர்ந்து 
மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்துக்கான ஆரம்ப வேலைத்திட்டம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், அரச சார்பற்ற நிறுவனங்களான சுவாட் மற்றும் ஒக்ஸ்பாம் ஆகியவை மேற்படி திட்டத்தினை அமுல்படுத்துகின்றன.

மேற்படி நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரட்ணம், திருக்கோவில் பிரதேச சபைத் தவிசாளர் வி.புவிதராஜன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஐ.எல்.ஹைதரலி,கிராம அலுவலர் சு.பார்த்திபன் மற்றும் சுவாட் அமைப்பின் பிரதிநிதி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்குழாய் நீர் விநியோகத் திட்டத்துக்காக சுமார் 28 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுக்காமம் பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் - இரண்டு வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












You may like these posts

Comments