Contact Form

Name

Email *

Message *

பகவான் சத்யசாயி பாபா நினைவுநாள்

உலகம் முழுதும் கோடிக்கணக்கில் பக்தர்களை கொண்டிருக்கும் பகவான் சத்யசாயி பாபா அவர்களின் நினைவு நாள் இன்றாகும், அவர் இந்த பூமிப் பந்தை விட்டு மறைந்து இன்றுடன் ஒருவருடமாக…

Image
உலகம் முழுதும் கோடிக்கணக்கில் பக்தர்களை கொண்டிருக்கும் பகவான்
சத்யசாயி பாபா அவர்களின் நினைவு நாள் இன்றாகும், அவர் இந்த பூமிப்
பந்தை விட்டு மறைந்து இன்றுடன் ஒருவருடமாகிறது.
தனது அன்பாலும், ஆன்மிக கொள்கையாலும், தனது பக்தர்களுக்கு அருள்
வழங்கி சர்வமத சாதுவாக, மனிதநேய மாந்தர்களுக்குள் ஒரு மனித உருவில் நடமாடிய தெய்வம் புட்டபர்த்தி சாயிபாபா அவர்கள். அவர் சகல
இன, மத மக்களையும் அரவணைத்தவர்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டப்பர்த்தி
என்னும் ஊரில் பிரசாந்தி நிலையம் என்ற புண்ணிய தலம் இன்றும் கோடான கோடி பக்கதர்களின் ஆன்மிக, அருள்த்தலமாக போற்றப்படுகிறது.
அன்று ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் தனது பக்தர்களுக்கு
தரிசனம் கொடுத்த சத்யசாயி பாபா இன்று தன் பக்தர்களுக்கு அவரவர்
வீடுகளிலே தரிசனம் தருவதாக செய்திகள் வருகின்றன. இதை அவரின்
பக்தர்கள் மூலமாக அறியமுடிகிறது. அண்மையில் தமிழ்நாட்டுக்கு சென்றிருந்த எனது உறவுக்கார பெண் ஒருவர், தான் அங்கு ஒரு பாபா
பக்தரின்  வீட்டுக்கு சென்று பஜனையில் கலந்து கொண்டதாகவும், பஜனை
முடிவில் மூடியிருந்த பிரசாதங்கள் பாபாவினால் கடித்து, சுவைக்கப் பட்டிருந்ததாகவும், இது அந்த பக்தரின் வீட்டில் நாள்தோறும் நடப்பதாக
அந்த வீட்டார் சொன்னதாகவும் என்னிடம் சொல்லி, அதற்கான ஆதாரத்தையும் என்னிடம் காண்பித்தார்.

ஆக, அவரது மனித உடல் அழிந்ததே தவிர அவரது ஆன்மா என்றும் அவரது
பக்தர்களுக்கு ஆசியும், அருளும், அற்புதங்களும் வழங்கிக்கொண்டே இருக்கும், என்பதற்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் சான்றாக இருக்கிறது.
இன்று உலகம் முழுவதும் பகவான் சத்யசாயி பாபாவின் நினைவுநாளில்
பஜனைகள், பூஜைகள், சமூக தொண்டுகள், அன்னதானங்கள் என்று உணர்வுபூர்வமாக நினைவு கூரப்படுகிறது. இந்த தெய்வீக நாளில் எமது
இணையத்தளமும் பங்கெடுத்துக் கொள்கிறது.
.

You may like these posts