அம்பாறை மாவட்டம் சங்கமன்கண்டி - காட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் கட்டிடத்தை யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக ஆலயத்தின் பூசகர் தெரிவித்தார்.
இரவு வேளையில் இங்கு வந்த யானையொன்று ஆலய கட்டிடத்தின் சுவர் மற்றும் கூரைகளை உடைத்துச் சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளது. இதனால், ஆலயத்தின் தளபாடங்கள் மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளன.
ஒரு சில மாதங்களுக்குள் இக் கோவில் நான்கு தடவைகள் யானைகளின் தாக்குதலில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்ததெனக் கூறப்படும் இந்த ஆலயத்துக்கு – தூர பிரதேசங்களைச் சேர்ந்த பக்தர்களும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு வந்து செல்கின்றனர்.
இப் பகுதியில் யானைகளின் தாக்குதலில் சிலர் கொல்லப்பட்டதோடு, குடியிருப்பு வீடுகளும் கடுமையான சேதங்களுக்குள்ளாகி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சங்கமன் கண்டி பகுதியில் யானைப் பாதுகாப்பு வேலியினை அமைத்துத் தருமாறு இப் பிரதேச மக்கள் நீண்ட காலமாக கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

+-+Windows+Picture+and+Fax+Viewer.jpg)
+-+Windows+Picture+and+Fax+Viewer.jpg)
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!