Contact Form

Name

Email *

Message *

சுனாமி பாதுகாப்புத் தொடர்பான கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலகமும் 16ஆவது இராணுவ படைப்பிரிவும் இணைந்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு  சுனாமிப் பாதுகாப்பு முன்திட்டம் தொடர்பான கல…

Image

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலகமும் 16ஆவது இராணுவ படைப்பிரிவும் இணைந்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு  சுனாமிப் பாதுகாப்பு முன்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்றை நேற்று வியாழக்கிழமை நடத்தியது. 
சுனாமி ஏற்படும்போது கடற்கரை பிரதேசத்திலுள்ள பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக  வெளியேற்றுவது மற்றும் இதன்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 
திருக்கோவில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், 16ஆவது இராணுவ படைப்பிரிவு இராணுவ மேஜர் சில்வா, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.ராஜேந்திரா ஆகியோர் அதிதிகளாகவும் அரசாங்கத் திணைக்கள மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.





You may like these posts

Comments