Contact Form

Name

Email *

Message *

உலக புத்தக தினமும், ஷேக்ஸ்பியரும்...

வணக்கம் அன்பு   வாசகர்களே! எமது இணையத்தளத்தில் இரண்டு வாரங்களாக எந்த செய்திகளையும் பார்க்கமுடியவில்லை. எமது பிரதேசத்தில் இருந்து செய்திகளை அனுப்பும் செய்தியாளர்களுக்கு…

Image
வணக்கம் அன்பு   வாசகர்களே! எமது இணையத்தளத்தில் இரண்டு வாரங்களாக எந்த செய்திகளையும் பார்க்கமுடியவில்லை. எமது
பிரதேசத்தில் இருந்து செய்திகளை அனுப்பும் செய்தியாளர்களுக்கு
நேரமின்மை காரணமாக இருக்கலாம். இருந்தாலும் அவ்வப்போது ஒரு சில
செய்திகளையாவது தளத்தில் பார்த்தால் புலத்தில் வாழும் நம்மவர் மிகவும்
சந்தோசப்படுவார்கள் என்று சொல்லிக்கொண்டு, இன்று (23.04.2012) உலக
புத்தக தினமாகும். இதுபற்றி எனது தனிப்பட்ட இணையத்தளமான http://www.koviloor.com/  என்ற தளத்தில் எழுதியிருக்கிறேன். எனது தளத்தை நமது
இந்த தளத்தின் வலது பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள மேற்படி எனது தளத்தை அழுத்துவதன் மூலம் நீங்கள் பார்க்கலாம்.

ஒரு சில மனிதர்கள் பிறந்த நாளிலேயே இறந்தும் இருக்கிறார்கள். மிகவும்
அபூர்வமாகவே இந்த நிகழ்வு ஏற்படக்கூடியது. இப்படிப்பட்டவர்கள் ஓரளவு
குறிப்பிடத்தக்க அளவு பிரபல்யமாகவும் இருந்திருக்கிறார்கள். அந்தவகையில்
ஆங்கில நாடக ஆசிரியரும், கவிஞருமான சேக்ஸ்பியர், எழுத்தாளர் செர்வாண்டிஸ், போன்றவர்கள் மேற்க்குலகிலும், இந்தியாவில் பசும்பொன்
முத்துராமலிங்கம், எழுத்தாளர்  லாசாரவ் ஆகியோரும் அடங்குவர். சேக்ஸ்பியரின் பிறந்த நாளும், இறந்த நாளும் இன்றுதான். அதனால்தான் உலக புத்தக தினமாக இன்றைய நாளை யுனைஸ்கோ  அமைப்பு பிரகடனப் படுத்தியுள்ளது. முழு விபரம் எனது தளத்தில் பார்க்கலாம்.

"உலகமே ஒரு நாடக மேடை, அதில் நாம் எல்லாம் நடிகர்கள். இந்த மேடையில் ஒவ்வொருவருக்கும் வருவதற்கும் போவதற்கும் தருணங்கள்
உண்டு. இதில் என்ன வியப்பென்றால் ஒருவரே பல கதாபாத்திரங்களை
தாங்கி நடிக்கிறார்கள்." இந்த வாசகம்தான்  அதிக அளவு கோடிட்டு சொல்லப்பட்ட சேக்ஸ்பியரின்  வாக்கியமாக இருக்கிறது. பொதுவாக ஆங்கிலம் ஒரு cow boys மொழியாகவே இருந்திருக்கிறது. இந்தமொழிக்கு
வலுச் சேர்த்தவர் ஷேக்ஸ்பியர். அதற்கு சத்தும், சதையுமாக இருந்தவர். ஒரு
நாடோடிகளின் மொழி என்றில்லாமல் ஒரு இலக்கிய அந்தஸ்த்தை கொடுத்து காலப்போக்கில் அதை ஒரு உலக மொழியாகிய பங்கு அவருக்கு
உண்டு. ஐந்தாறு நூற்றாண்டுகள் கழித்தும் ஒரு படைப்பாளிக்கு, ஒரு கவிஞனுக்கு இன்றும் உலக அளவில் மிகப் பெரிய அந்தஸ்த்து கிடைக்கிறதென்றால் அது ஆச்சரியப்படக்கூடிய விடயமே. இங்கிலாந்தில்
"தியேட்டர்" என்ற அரங்கு உருவாகி அதில் இன்றுவரை ஆங்கில நாடகங்கள்
மேடையேற்றப் படுகின்றதென்றால் அதற்கு ஷேக்ஸ்பியரே காரணம். அவரே
பிதாமகன். இவருடைய நாடகங்கள் மிக அளவில் மொழிபெயர்க்க பட்டிருக்கிறது. பல மொழிகளிலும் பேசப்பட்டிருக்கிறது. இவர் 38  நாடகங்கள்
எழுதி இருக்கிறார். 158  சொனாட் என்று சொல்லப்படுகின்ற கவிதை வடிவம்
படைத்திருக்கின்றார். இது 14  ங்கு வரிகள் கொண்ட வடிவமாகும். பிற்காலத்தில் பாரதியார் கூட இந்த வடிவத்தை கையாண்டு இருக்கிறார்.

இவ்வளவிற்கும் ஷேக்ஸ்பியர் ஒரு கல்வியாளரோ, அறிஞரோ அல்ல. ஒரு
சாமான்ய மனிதனாக பல பணிகள் செய்தவராக இருந்திருக்கிறார். ஆனாலும்
அவரால் சாகா இலக்கியம் படைக்க முடிந்தது. தனது 18  வது வயதில் 
தன்னைவிட எட்டு வயது மூத்தவரான ஆன் என்னும் அம்மையாரை மணந்து 
ஒரு மகளும், இரட்டைக் குழந்தைகளாக ஆண் குழந்தைகளையும் தனது 
வாரிசுகளாக கொண்டிருந்தார். இவருடைய எல்லா பிரசித்தி பெற்ற நாவல் ,
நாடகங்கள், கவிதைகள் முழுவதும் பத்து வருடங்களுக்குள்ளேதான்
எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது.இவரது 40  வது வயதில்தான் இவரது
படைப்புகள் உச்ச நிலைக்கு சென்றன, தனது 52  வது வயதிலே ஷேக்ஸ்பியர்
இறந்துபோனார். இவர் ஆரம்பத்தில் நகைச்சுவை நாடகங்களைத்தான்
எழுதி பிரபலம் ஆனார். "mid summer night dream", "as you like it" போன்றவை
குறிப்பிடத்தக்கவை. பின்பு அவர் முதிர்ச்சி அடைந்தபின் சோகமான நாடகங்களே எழுதினார். ஹாம்லெட், ஜுலிய சீசர். ஒத்தல்லோ போன்றவை
விதந்து இன்றுவரை பேசப்படுகிறது.
இவருடைய மேன்மைக்கு ஒரு உதாரணம் சொல்வதென்றால்,
" இங்கிலாந்தின் எல்லா செல்வங்களையும் யாரோ ஒருவர் கொள்ளையடித்து 
 சென்று, பின்பு  ஏதாவது ஒரு செல்வத்தை மட்டும் நீங்கள் திருப்பி கேட்க
ஒரு சலுகை தந்தால், நான் ஷேக்ஸ்பியரின் படைப்புகளைத்தான் திருப்பி
கேட்பேன்" என்று சொன்னார். பேறிஞர் பெர்னாட்சோ அவர்கள். இதிலிருந்து
அந்த ஆங்கிலக் கவிஞன், ஷேக்ஸ்பியரிடம் எவ்வளவு மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார் என்று நாம் பார்க்கலாம்.

சரி, வாசகர்களே! இன்றைய உலக புத்தக தினத்தில் ஒரு சில  விடயங்களை  
உங்களுடன் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு
நன்றி. ஊரில் இருக்கும் செய்தியாளர்கள் தங்களால் முடிந்தவரை ஊர் பற்றிய
செய்திகளை தருவீர்கள் என்று புலத்தில் வாழும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.




You may like these posts