


இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுமார் 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கையை 4.9 சுனாமி தாக்கும் எனவும் கொழும்பை 4.09 க்கும், திருகோணமையை4.21 க்கும், யாழ்பாண்த்தை 6.01 க்கும் தாக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்நாடுகளாவன:
INDONESIA / INDIA / SRI LANKA / AUSTRALIA / MYANMAR / THAILAND / MALDIVES / UNITED KINGDOM / MALAYSIA / MAURITIUS / REUNION / SEYCHELLES / PAKISTAN / SOMALIA / OMAN / MADAGASCAR / IRAN / UAE / YEMEN / COMORES / BANGLADESH / TANZANIA / MOZAMBIQUE / KENYA / CROZET ISLANDS / KERGUELEN ISLANDS / SOUTH AFRICA / SINGAPORE
இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் 8.7 சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியுள்ளது.
இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி உருவாகியிருக்கிறதா என்பது தெரியாவிட்டாலும் பிராந்திய நாடுகளின் அரசாங்கங்கள் உரிய எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் வழக்கமாக பூகம்பங்கள் தாக்குவது வழக்கம். இந்து சமுத்திர பிராந்தியத்தில் 2004 ஆம் ஆண்டு தாக்கிய சுனாமியில் ஒரு லட்சத்து எழுபதினாயிரம் பேர் அச்சேவில் பலியானார்கள்.
அச்சே மாநிலத்தின் தலைநகரான பண்டா அச்சேவில் இருந்து 495 கிலீ மீட்டர் தொலைவில் கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் பூகம்ப மையம் நிலைகொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டிருந்தது.
இந்த பூகம்பம் 8.9 ரிக்டேர் சக்தி கொண்டது என்று ஆரம்பத்தில் இது மதிப்பிட்டாலும், பின்னர் அதனை 8.7 ரிக்டேராக அது மாற்றியது.
இந்தளவு சக்தி வாய்ந்த பூகம்பங்கள் சுனாமியை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தவை என்று அது எச்சரித்துள்ளது.
இந்த பூகம்பத்தின் அதிர்வு இந்தியா, சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய இடங்கள் வரை உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுனாமி தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கரையோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டிருக்கிறார்கள்.
Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!