Contact Form

Name

Email *

Message *

நந்தன வருஷப்பிறப்புக் கருமங்கள்...(ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய குரு)

News By :Parthipan. நந்தன வருஷப்பிறப்புக் கருமங்கள் சித்திரை தமிழ் 1ம் நாள் (13.04.2012) வெள்ளிக்கிழமை பிற்பகல் 5மணி 45நிமிடத்தில் அமரபக்க அட்டமித்திதியும் உத்தராட நட்சத்தி…

Image
News By :Parthipan.

நந்தன வருஷப்பிறப்புக் கருமங்கள்

சித்திரை தமிழ் 1ம் நாள் (13.04.2012) வெள்ளிக்கிழமை பிற்பகல் 5மணி 45நிமிடத்தில் அமரபக்க அட்டமித்திதியும் உத்தராட நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் சித்த நாம யோகத்திலும் பாலவகரணத்திலும் கன்னிலக்கினத்திலும் இப்புதிய நந்தன வருஷம் பிறக்கின்றது.

அன்று பிற்பகல் 1மணி 45நிமிடம் தொடக்கம் முன் இரவு 9மணி 45நிமிடம் வரை விஷ புண்ணியகாலமாகும்.

இப்புண்ணியகாலத்தில் யாவரும் மருத்துநீர் தேய்த்து சிரசில் கொன்றை இலையும் காலில் புங்கமிலையும் வைத்து ஸ்நானம் செய்து நல்ல பச்சைப் பட்டாடை அல்லது வெள்ளைக்கரை அமைந்த புதிய பட்டாடை தரித்து விபூதி சுகந்தம் சந்தனம் பூசி மலர்சூடி விநாயகர் முதலிய குலதெய்வங்களை வழிபாடு செய்து சூரிய பகவானுக்கு பொங்கல் பூசை செய்து குரு பெற்றோர் முதலியவர்களை வணங்கி அறுசுவையுடன் பொரிக்கடுகு, புளி, பொரிஎள்ளு, நெல்லிக்கனி, என்பவற்றை சேர்த்தருந்தி தாம்பூலம் தரித்து கண்ணாடி, தீபம், நிறைகுடம் என்பவற்றில் முகதரிசனம் செய்து இஷ்ட தெய்வங்களை வணங்கியும் என்றென்றும் சுகமாக வாழக்கடவீர்.

வருஷதோஷ நட்சத்திரங்கள்
 கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், 1ம், 2ம்கால்கள், உத்தரம், மூலம் ,பூராடம் உத்தராடம் .

கைவிஷேசம்

விஷ புண்ணியகாலத்திலும் வருஷப்பிறப்பிலும் கைவிஷேசம் செய்து கொள்ளவும்.

• 15.04.2012 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.42 - 9.44 வரையும் மு.ப 9.56 - 11.54 வரையும்

• 16.04.2012  திங்கட்கிழமை மு.ப 9.10 - 9.44 வரையும் மு.ப 9.52 - 11.47 வரையும்   கைவிஷேசம் செய்து கொள்ளலாம்.

கிரக மாற்றங்கள்

• சனிமாற்றம்

சனி பகவான் சித்திரை மாத ஆரம்பத்தில் கன்னி ராசிக்கு வக்கிர நிலை அடைகிறார். கன்னி ராசிக்கு ஜென்மச்சனி, துலாராசிக்கு 71/2சனி ஆரம்பம்,சிங்க ராசிக்கு 71/2 சனி கடைக்கூறு, கும்பராசிக்கு அட்டமத்துச்சனி.      

இந்த சனி பகவான் (12.09.2012) ஆவணி மாதம் 27ம் நாள் மு.ப 9மணி 16நிமிடத்தின் பின்னர் துலாராசிக்கு வருவார். துலாராசிக்கு ஜென்மச்சனி, விருட்சிகராசிக்கு 71/2 சனி ஆரம்பம், கன்னி ராசிக்கு 71/2 சனி கடைக்கூறு, மீனராசிக்கு அட்டமத்துச்சனி இவ்ராசியினர் கிரக வழிபாடு செய்வது நல்லது.

• குரு மாற்றம்

வைகாசி மாதம் 4ம்நாள் (17.05.2012) வியாழன் மாலை 6மணி 50நிமிடத்தில் இடப ராசிக்கு வருகின்றார். இடபராசிக்கு ஜென்மக்குரு துலா ராசிக்கு அட்டமத்துக்குரு.

இங்ஙனம்                                  
சிவஸ்ரீ.நீதி அங்குசநாதக் குருக்கள்,
ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய குரு,
திருக்கோவில்.

You may like these posts

Comments