Contact Form

Name

Email *

Message *

தம்பட்டை அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலயத்தின் திருக்குடமுழுக்குப் பெருவிழா !

அம்பாறை மாவட்டம், தம்பட்டைப் பதியில் அமைந்துவிளங்கும், அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலய திருக்குடமுழுக்குப் பெருவிழா (கும்பாபிடேகம்) இன்று பங்குனி 5ஆம் திகதி (2012/03/18), ஞாயிற்ற…

Image
அம்பாறை மாவட்டம், தம்பட்டைப் பதியில் அமைந்துவிளங்கும், அருள்மிகு ஆறுமுகசுவாமி ஆலய திருக்குடமுழுக்குப் பெருவிழா (கும்பாபிடேகம்) இன்று பங்குனி 5ஆம் திகதி (2012/03/18), ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடந்தேறுகிறது.


இதை முன்னிட்டு குடமுழுக்குக் கிரியைகள், கடந்த 14ஆம் திகதியே ஆரம்பித்ததுடன், எண்ணெய்க்காப்பு சாற்றும் நிகழ்வு நேற்று நிகழ்ந்து, இன்று மு.ப 8.50தொடக்கம் மு.ப 9.45வரையான சுபவேளையில், கருவறை விமானத்துக்கும், மூலவருக்கும், திருக்குடமுழுக்கு இடம்பெற்றது. இன்றைய குடமுழுக்கைத்தொடர்ந்து, 48 நாட்கள், ஆலயத்தில், மண்டலாபிடேகம் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்புத் தமிழகமெங்கும் விரவி வாழும் வீரசைவக்குருமாரில், பெரும்பாலானோரின் தாய்மண்ணே தம்பட்டைப்பதி என்பதும், அச்சான்றோரின் வழிபடுதெய்வமாக, நீண்டநாட்களாக நிலவிவருகின்ற மூர்த்தியே இவ்வாறுமுகசுவாமி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

You may like these posts

Comments