By .க.ஜெயசேகர் (கண்ணன்) & அம்பாறை மாவட்ட நிருபர்திருக்கோவில் பிரதேசத்தில் பைக்கோ (மண்அகழ்வும்) வாகனம் கட்டுப்பாட்டை
மீறி வீதியை விட்டு விலகி இன்று(21) மாலை வீதி விபத்துக்குள்ளானதில் 12 வயது
பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அந்த பிரதேசத்தில்
ஏற்பட்ட பதட்டத்தை இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நிலமையை
கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜெயசூரிய தெரிவித்தார்
திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பிரதான வீதியில் இன்று
மாலை 5 மணிக்கு சென்றுகொண்டிருந்த பைக்கோ வாகனம் திருக்கோவில் பிரதேச
சபைக்கு முன்னால் திடீரென வீதியை விட்டுவிலகி வீதியில் தனியார் வகுப்பிற்கு
சென்று நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களுடன் மோதி விபத்துக்குள்ளானது
இவ் வீதி விபத்து சம்பவத்தில் தம்பிலுவில் இரண்டாம் பிரிவு தம்பிமுத்து
வீதியைச் சேர்ந்தவரும் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 7ஆம்
ஆண்டில் கல்விகற்று வரும் மதனராஜா இலக்சன் 12 வயது மாணவனே பரிதாபகரமாக
ஸ்தலத்தில் உயிரிழந்தார் இதணையடுத்து வாகன சாரதி தப்பி ஓடி பொலிசாரிடம்
சரணடைந்தார்.
இதணையடுத்து பிரதேச மக்கள் ஆத்திரமடைந்து பைக்கோ வானத்தை சேதப்படுத்து
முற்பட்டதுடன் கல்வீச்சுக்களையும் நடாத்தினர் இதனால் பிரதேசத்தில் பதற்றம்
ஏற்பட்டதையடுத்து இராணுவத்தினரை வரவழைக்கப்பட்டு; நிலமையை கட்டுப்பாட்டிற்கு
கொண்டுவரப்பட்டது
இச்சம்பவத்தில் வான சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்த மாணவனின் சடலம்
திருக்கோவில் மாவட்ட வைத்திய சாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது இது தொடர்பான
விசாரணையை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்












Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!