.
“எம் பிரதேசத்தினை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம்”என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இச்சிரமதானத்தில், UNOPS நிறுவன அம்பாறை மாவட்ட திண்மக் கழிவகற்றல் பொறுப்பாளர், திருமதி சிசிலியா, திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.ஆர்.சுலோசனாதேவி , பிரதேச செயலாளர் திரு.எம்.கோபாலரெட்ணம், பிரதேசசபை தவிசாளர். திரு.வி.புவிதராஜன் உட்பட, கிராம உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அரசாங்க ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
திருக்கோவில் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் முதல், தம்பிலுவில் தாழையடி சிவனாலயம் வரையான கடற்கரைப்பரப்பு, இச்சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், கரையோரமாக, கழிவுகளை அகற்றல் தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளும் நடப்பட்டன.
இதை அடுத்து, வாராவாரம் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், குறித்த பகுதியை அண்டி வதியும் பொதுமக்கள், அரசாங்க ஊழியர்களால், இச்சிரமதானம் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
நமது வலைத்தளத்தில்(Website) வெளியான, “நம்ம ஊரு கடற்கரையில நடக்கிற கொடுமையை கொஞ்சம் கவனிக்கிறேலோ!”, “எழிலான எங்களூரின் கடற்கரை” ஆகிய ஆக்கங்களைத் தொடர்ந்தே நமது பிரதேச கடற்கரை மீது, மக்களின் கவனம் திரும்பியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தவகையில், கடற்கரையில் இடம்பெற்ற சிரமதானத்தில், நமது வலைத்தளத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது என்பதில் Thambiluvil.info|Thirukkovil.com பெருமகிழ்ச்சியடைகிறது.திருக்கோவில் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் முதல், தம்பிலுவில் தாழையடி சிவனாலயம் வரையான கடற்கரைப்பரப்பு, இச்சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், கரையோரமாக, கழிவுகளை அகற்றல் தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளும் நடப்பட்டன.
இதை அடுத்து, வாராவாரம் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும், குறித்த பகுதியை அண்டி வதியும் பொதுமக்கள், அரசாங்க ஊழியர்களால், இச்சிரமதானம் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
நமது வலைத்தளத்தில்(Website) வெளியான, “நம்ம ஊரு கடற்கரையில நடக்கிற கொடுமையை கொஞ்சம் கவனிக்கிறேலோ!”, “எழிலான எங்களூரின் கடற்கரை” ஆகிய ஆக்கங்களைத் தொடர்ந்தே நமது பிரதேச கடற்கரை மீது, மக்களின் கவனம் திரும்பியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சிரமதானத்தில் பங்குகொண்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் யாவருக்கும், நமது வலைத்தளத்தின் சார்பில், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதுடன், திருக்கோவில் பிரதேசசபை, கடற்சுற்றாடல் தூய்மையில் கவனமெடுத்ததைப் போலவே, சட்டவிரோத மண்ணகழ்வுக்கும் விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறோம்.
ஒளிப்படங்கள்: வி. அன்புஜி

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!