அண்மையில் எமது இணையத்தளத்தில் எங்கள் ஊர் கடற்கரையின் அவலம்
பற்றி வந்த ஒரு செய்தியையும் அதைத்தொடர்ந்து நாம் எழுதிய ஒரு கட்டுரையையும் பலர் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள் என்று அறிய
முடிகிறது. அதன் பிரதிபலிப்பாக இன்று
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத
சுவாமி ஆலயத்தின் முன்னுள்ள கடற்கரையிலிருந்து தம்பிலுவில் தாளையடி
சிவன் கோவில்வரை அமைந்துள்ள கடற்கரை வரை சிரமதானப்பணி
நடைபெறுவதாக அறியமுடிகிறது. இந்த பணி திறம்பட நடைபெற புலம்பெயர்ந்து வாழும் எம் மண்ணின் மைந்தர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம். இந்த சிரமதானப் பணிக்கு ஒழுங்கு செய்த அனைவரையும்
இதில் கலந்துகொண்ட அனைத்து மக்களையும் நாம் மனதார பாராட்டுகின்றோம். இதே போன்ற சிரமதானப் பணிகளை எமது ஊர் பகுதிகளில் உள்ள பொது இடங்களிலும் மேற்கொண்டு எமது பிரதேசத்தை
சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வது எமது கடமையாகவும்,
பொறுப்பாகவும் இருக்கவேண்டும். நன்றியுடன் கூடிய வாழ்த்துக்களும்
பாராட்டுகளும் மீண்டும் ஒருமுறை எம் மக்களுக்கு.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!