இலங்கையிலே இருக்கும் முருகன் ஆலயங்களுள் மிக பழமை வாய்ந்ததும்
வரலாற்று தொடர்புடையதுமான மேற்படி ஆலயம் பற்றிய சிறப்புகளை
சொல்வது இக்கட்டுரையின் நோக்கமல்ல.அவையெல்லாம் எமது மக்களுக்கு
தெரிந்த விடயங்களே, மாறாக இவர்களுக்கு தெரியாத ஒரு சில விடயங்கள்பற்றியோ அல்லது தெரிந்தவர்கள் அதை மக்களுக்கு தெரியப்
படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலோ இங்கு சில தகவல்களை,அல்லது
கேள்விகளை புலத்தில் வாழும் எம் மக்கள் சார்பாக இத்தளத்தின் மூலம்
முன்வைக்கின்றோம்.
திருக்கோவில் முருகனுக்கு ஏகப்பட்ட வருவாய் தரக்கூடிய சொத்துக்களும்,
உற்சவ காலங்களில் கிடைக்கும் வரும்படியும் இருக்கின்றன என்பதை
எல்லோரும் அறிவார்கள்.மட்டக்களப்பு எட்டுபகுதிக்கும் சொந்தமான
இந்த ஆலயத்திற்கு நிர்வாக சபை என்ற ஒன்று இருப்பதும், அது ஒவ்வொரு
வருடமும் ஆடியமாவாசை தீர்த்தோற்சவம் முடிந்தபின் "மகாசபை"கூட்டம்
என்ற பெயரில் நடப்பதும், அதில் பல கேள்விகள், பதில்கள், வாதப்,பிரதிவாதங்கள், ஆண்டறிக்கை, கணக்கறிக்கை என்பன காலம்காலமாக வாசிக்கப்படுவதும், அதற்க்கு கிடைக்கும் சாதக, பாதக
விமர்சனங்களும் ஓரளவு அந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு
மட்டுமே தெரிந்த விடயங்களாக இருந்துவருகின்றன.இதை எமது மக்களுக்கு முறையாக ஓர் அறிக்கைமூலம் அறிவிக்கப்படுகின்றதா? என்றால் இல்லை.
அந்தக்காலத்தில் பழுகாமத்தில் தலைவர் இருப்பார்.அக்கரைப்பற்றில்
செயலர் இருப்பார்.காரைதீவில் கணக்காளர் இருப்பார்.ஆண்டுக்கு ஒருமுறை
இவர்கள் வந்து கூடி பேசுவதே இந்த மகாசபை.இப்படித்தான் அன்றைய
நிர்வாகம் இருந்தது.இதை நாங்கள் எமது பால்ய வயதிலிருந்தே பார்த்து, பின்
வளர்ந்தபின்னும் பல கேள்விகள் முன்வைத்தும் வந்திருக்கிறோம்.ஆனால்
உரிய பதில்களோ, ஆக்கபூர்வமான செயல்பாடுகளோ கிடைக்கவில்லை
என்பதுதான் உண்மை.
அறிவியல் மேலோங்கிய இக்காலத்தில் மாற்றங்களும், நடவடிக்கைகளும்
இந்த கோவில் நிர்வாகத்திடமிருந்து வரவேண்டுமல்லவா?தகவல், தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் உச்சத்தை அடைந்த இந்தக் காலத்தில்
கூட இந்த கோவிலின் நிர்வாகத்தினர் , இன்னும் இந்த முருகன் கோவில்பற்றிய கணக்கறிக்கைகள், வரவு செலவுகள் மற்றும் செயல்பாடுகள்
பற்றி பொதுமக்கள் பார்வைக்கு உரிய முறையில் வைக்கவில்லை என்ற
குற்றச்சாட்டு கல்வியறிவுடைய ஊரவரிடமிருந்தும், தாய்மண்ணை விட்டு
புலம்பெயர்ந்து வாழும் எம்மூர் மக்களிடமிருந்தும் பரவலாக எழுகின்றது.
திருக்கோவில் முருகன் கோவிலுக்கு கிடைக்கும் நன்கொடைகள் பற்றியும்,
புனருருத்தாரண வேலைகளுக்காக கிடைக்கும் கொடுப்பனவுகள் பற்றியும்,
உரிய கணக்கு வழக்குகள் காட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் புலத்தில்
வாழும் நலன்விரும்பிகளுக்கு இருக்கிறதை அறியமுடிகிறது.
மற்றும், இந்த கோவில் நிர்வாகத்தினர் ஒரு அசட்டையீனமும், அசமந்தப்
போக்கும் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு உதாரணங்களும்
இருக்கின்றன.குறிப்பாக கடல்கடந்து வாழும் எமது ஊர் கலைஞர்கள் இந்த
முருகன் கோவில் பற்றி பாடிய ஒலிநாடா, இறுவெட்டு வடிவிலான பக்தி
பாடல்கள், நூலுருவில் வருகின்ற கட்டுரைகள் போன்ற ஆக்கங்களை,
ஆவணங்களை ஒரு ஆக்கபூர்வமான அம்சங்களாக பார்க்கவில்லை என்றும்
இந்தக் கலைஞர்கள் பல லட்சங்கள் செலவுசெய்து, எமது கோவிலுக்கும்
எம் மக்களுக்கும் கொடுக்கும் இந்த படைப்புகளை உதாசீனம் செய்யும் வகையில் இந்த நிர்வாகத்தினர் நடந்து கொள்கிறார்கள் என்றும் இந்த படைப்பாளிகள் விசனம் தெரிவிக்கிறார்கள், வருத்தப்படுகிறார்கள்.இந்த
நிர்வாகத்தினர் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.இந்த கலைஞர்கள் தங்கள்
வருமானத்திற்காகவோ அல்லது வேறு எந்த நலனுக்காகவோ இதை செய்யவில்லை.முழுக்க முழுக்க எமது கோவிலின் மேம்பாட்டிற்காகவும்,
மக்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்கும் மட்டுமே தங்கள் பெரும் தொகை பணத்தை செலவு செய்து இந்த படைப்புகளை செய்கிறார்கள்.
இலங்கையிலேயே,எமது உகந்தைமலை முருகனுக்குத்தான் முதன்முதலில்
முழுமையான தனிப் பக்திப் பாடல்கள் பாடாப்பெற்று வெளிவந்தன.(1986 )
அதை தொடர்ந்து திருக்கோவில் முருகன்கோவிலுக்கு தனிப்பாடல்கள்,
அடுத்து எமது பகுதிகளில் உள்ள பிள்ளையார், அம்மன் கோவில்களுக்கு
பக்திப் பாடல்கள், அதன்பின் திருக்கோவில்முருகன் கும்மி பாடல்கள், காவடி
சிந்து என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இவற்றை தயாரித்து வெளியிடும்போது ஏற்படும் சிரமங்கள், செலவுகள் எல்லாம் மிக,மிக ஏராளம்,
என்பதை இந்த கோவில் தர்மகத்தாக்களோ, அல்லது நிர்வாகத்தினரோ
புரிந்துகொள்வதில்லை.சரி பரவாயில்லை ,குறைந்தபட்சம் இந்த படைப்புகள்
அங்கு வந்து சேரும்போது அவற்றை உரியமுறையில் வரவேற்று, மக்களுக்கு
அவை சென்றடைய வழிவகுக்கலாம் அல்லவா?அதைக்கூட ஏன் இவர்கள்
செய்வதில்லை என்ற கேள்வியே, இவற்றை செய்யும் படைப்பாளிகளிடம்
இருக்கிறது.
அடுத்து மிக முக்கியமான செய்திகுறித்தே இந்த தளத்தினூடாக பேசவந்தோம்.
அது "இராஜகோபுரம்"பற்றிய செய்தி. திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத
முருகன் கோவிலுக்கு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இராஜகோபுரத்திற்கு பலரும் பலவைகையில் உதவலாம்.பலவழிகளில்
பணம் வந்து சேரலாம்.இது முற்றுப்பெறுவதற்கு அதிக பணம் வேண்டும்
என்பதை எல்லோரும் அறிவார்கள். இதற்கு எதிர்வரும் ஆடியமாவசை
உற்சவ காலத்தில் ஒரு பெரிய இசைநிகழ்ச்சியை, தமிழ்நாட்டு பாடகர்கள்,
இசைகலைஞர்கள் உட்பட ஒன்றிணைந்து நடத்துவதற்கு விருப்போடு
இருக்கும் புலத்தில் வாழும் எம்மண் பிறந்த கலைஞர்கள்,ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தும், இந்த கோவில் நிர்வாகத்தினரோ, அல்லது இந்த கோபுர நிர்மான
நிர்வாகிகளோ இதுவரைக்கும் ஒரு ஆக்கபூர்வமான செயல்பாடுகளிலோ
அல்லது சம்பந்தப்பட்டவர்களுடன் பேசவோ முன்வரவில்லை என்று
அறிகின்றோம். இப்படி ஒரு பணம் சேகரிக்கும் திட்டம்
அல்லது வழி இருக்கிறதென்றால், அந்த நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்டவர்களுடன்
தொடர்பு கொண்டு இதுபற்றி இதுவரைக்கும் பேசவில்லை.இவர்கள் இது தொடர்பாக கோவிலோடு தொடர்புடைய ஒருசிலருடன் பல தடவைகள் பேசியும் இன்னும் காத்திரமான ஒரு பதிலோ
அறிக்கையோ அவர்களால் அளிக்கப்படவில்லை.
ஆகவே, இந்த தளத்தைப் பார்ப்பவர்களோ , அல்லது இந்த தளத்தில் தங்கள்
பங்களிப்பை செய்பவர்களோ தயவுசெய்து இந்த "இராஜ கோபுர "நிர்மான
நிர்வாகிகள் பற்றியோ அல்லது அவர்களின் விருப்பு, வெறுப்புகள் பற்றியோ
அல்லது இந்த கலைஞர்கள் கோரிக்கைக்கு இவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? என்பதுபற்றியோ இந்த இணையத்தளத்தின்மூலம்
பதில் தருவார்களா?என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்,கலைஞர்கள்.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக்கோவிலுக்கு இதுவரை காலமும்
ஒரு இராஜ கோபுரம் இல்லாமல்போனது யாரு செய்த பாவம்?நேற்று முடிந்த
கோவில்களுக்கு கூட இராஜகோபுரம் இருக்கிறது.வரலாற்றோடு கூடிய
எமது கோவிலுக்கு இந்தக்கோபுரம் இன்னும் அமையவில்லையே என்ற
ஆதங்கமும் எமது மக்களிடம் இருக்கிறது.உலகம் முழுதும் பரவிவாழும்
இந்துப்பெருமக்களிடமும் இந்த இணையத்தளம் மூலமாக இராஜகோபுர
நிதிசேர்க்க முடியும்.இதுபற்றியும் இந்த நிர்வாகத்தினர் உரியவர்களுடன்
தொடர்புகொள்ளலாம்.
இந்தக் கட்டுரை யாரையும் காயப்படுத்தவோ, அல்லது கறைப்படுத்தவோ
எழுதப்படவில்லை, மாறாக ஒரு நல்ல சாதகமான பதிலையோ,அல்லது
விளகத்தையோதான்இந்த இணையத்தளத்தின் மூலமாக எதிர்பார்க்கிறது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!