நம்ம ஊர் கடற்கரையில் இடம்பெறும் சம்பவம் பற்றி எமக்கு ஒருவர் அனுப்பி இருந்தார் அதை அப்படியே உங்களுக்கு தருகிறோம் .. இஞ்ச கொஞ்சம் கவனிக்கிறேலோ.....!!!
எல்லாருக்கும் வணக்கம்... எப்பிடி...நல்ல சுகமா இருக்கிறேலோ ?
வணக்கஞ் சொன்ன கையோட ஒரு பழமொழியையும் சொல்லிக்கொள்ள விரும்புறன்..
'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...'
இந்தப் பழமொழிக்கும் கட்டுரைக்கும் என்ன சம்மந்தம் எண்டு நீங்க நினைக்கலாம்.. இருக்கு இருக்கு...
ஊரில, வாழ்வு கலியாணம் எண்டாலுஞ் சரி,பிள்ளேல் பெரியாளான வீடெண்டாலும் சரி ஆருஞ் செத்து முப்பத்தொண்டு அமுது எண்டாலுஞ் சரி... நம்மட சனங்கள் தவறாமல் செய்யிற ஒரு வேலை வளவுக்குள்ள ஒரு லோடு மண்ணேத்திப் பறிக்கிறதுதான்!
இது எவ்வளவு பெரிய பிழையான வேலை என்றது நம்மளுக்கு விளங்கப் போறல்ல.... விளங்கப் போற காலம் நம்மள் சீவனோட இருக்கப்போறதுமில்ல... ...இன்னம் அஞ்சி பத்து வருசத்துக்கு பிறகு பிள்ளை குட்டிகள் கஷ்டப்படுற நேரம் அதுகளுக்கு தான் விளங்கும்!
இப்ப தம்பிலுவில்ல இருக்கிறவங்கள் கொஞ்சநாள் தொடர்ந்து கடக்கரைக்குப் போய் பாருங்கோ... முதல்நாள் பாத்த மண்ணில அரைவாசி மண்ண அடுத்த நாள் காணமாட்டேல்... அதுவுஞ் சிவன் கோயிலுக்கு இஞ்சால இருக்கிற இடம் இருக்கு பாருங்கோ.. எண்ட கண்ணகைத் தாயாரே.....அதில றெக்ரர்ர டயர் தடம் இல்லாத நாளே இல்ல எண்டுவன்.
ஆனா அநியாயத்தப் பாருங்கோ! இது தெரிஞ்சும் நம்மட சனங்கள் திருட்டுத்தனமா மண்ணேத்துதுகள்... இஞ்ச நம்மட சனம் நம்மட சனம் எண்டு நான் சொல்றது தம்பிலுவில் ஆக்கள மட்டுமில்ல – நம்மட முழு திருக்கோயில் பிரதேசத்திலையும் கடலோரம் இருக்கிற எல்லா ஊர்ச்சனங்களையும் தான்!
மண்ணேத்துற சனங்கள நான் பிழை சொல்றன் எண்டு நினையாதேங்கோ.. நானும் அதில அடங்குற ஆள் தான்... நாலஞ்சி மாதத்துக்கு முதல் நானும் பக்கத்து எல்லமானத்து கலியாண வீட்டுக்கு ரெண்டு லோடு மண்ணேத்திப் போட்டவன் தான்.
ஆனால் கன்னாளைக்கு பிறகுஇ போன கிழமை கடக்கரைக்கு போன நான் அப்பிடியே ஆடிப் போயிற்றன். அங்க கடல் தான் இருந்திச்சி....கரையக் காணல்ல.....நாலஞ்சி மாதத்துக்கு முதல்இ நான் மண்ணேத்துற நேரம் இருந்த மண்ணிலஇ பத்தில ஒரு பாகம் கூட இப்ப இருக்காது.. அடம்பங்கொடி ராவணன்மீசை இதுகள் மட்டும் கொஞ்சம் மண்ண காப்பாத்தி வச்சிருக்குது!
உண்மைலயே கடும் கவலையா போயிற்றுது.. இப்ப நம்மட அக்கம் பக்கம் நடக்கிறதுகள் தெரியும்தானே.. இந்தா ஒலுவில்ல கடல் நல்லா உள்ளுக்கு ஊருக்குள வந்திற்றுதாம்... மட்டக்களப்புலயும் கடல் உள்ளுக்கு வந்தது. நம்மட ஊருக்குளயும் கடல் வரஇ ஒரு வருசமும் ஆகாதெண்டு நினைக்கிறன். (2012 உலகம் அழியுதோ இல்லையோ நம்மட ஊர் அழியும்... அபசகுனமா கதைக்கிறன் எண்டு ஏசவேணாம்.... கடக்கரைக்கு போயிற்றுவந்தால் நீங்களும் அப்பிடி தான் சொல்லுவேல்.....)
சின்னப்பிள்ளைலஇ கடக்கர மண்ணில வீடு கட்டி விளையாடின ஞாபகம் இப்பயும் கண்ணுக்குள இருக்கு. ஏன்இ பத்து பன்ரெண்டு வருசத்துக்கு முதல்கூட சிவன் கோயிலுக்கு முன்னுக்கு - சாயி பாபா சமித்திக்கு கிட்ட - குருகுலத்துக்கு பக்கத்தாலஇ அங்கால 'மோத்தாரப்' பக்கம்இ நீட்டுக்கும் மண்மேடாவே இருக்கும்... அதில இடக்கிடை நீலநிறத்தில கறுப்புமண் ஓடி - அடம்பங்கொடி படர்ந்துஇ பாக்க நல்ல வடிவா இருக்கும். தெரியுந்தானே! சிவன் கோயிலச் சுத்தி அருணோதயா பள்ளி இருக்கிற ஏரியாவுக்கு பெயரே 'மணக்காடு' தான்....அப்பிடி மண் கொழிச்சிக் கிடந்த பூமி அது!
இப்ப மண்மேடு ஒண்டு கூட இல்லஇ போனகிழமை நான் போனநேரம் திருக்கோயில்இ குருகுலப் பக்கம் மட்டும் கொஞ்சம் கடக்கர மண் தெரிஞ்சது.. அது கூட மாரிகாலத்தில வழமயா கடல் ஒதுக்குற மண் தான்... சித்திர – வைகாசி பிறந்தோண திரும்பயும் அங்க கடல் வந்திரும்.
சிவன் கோயிலுக்கும் கடக்கரைக்கும் இடவெளி நல்லா குறஞ்சிற்றுது..முதலே போல திருவெம்பாவைக்கு தீர்த்தமாடிப் போட்டு காலாற நடக்கிற அளவுக்கு இப்ப கடக்கரை இல்ல...:(
கடக்கரைல காத்தாட வாற ஆரக் கண்டாலும்இ கடல் கிட்ட வந்திற்று - கடல் கிட்ட வந்திற்று எண்டு பயத்தோட சொல்றாங்கள்... கடலோ கிட்ட வந்தது...? மண்ணத் தோண்டி தோண்டி நம்மள் தான் கடல கிட்ட வரவச்சம்....??
மண்ணேத்திற கதை இப்ப தொடங்கினது இல்ல... எப்பவோ தொடங்கின ஏழரை அது.... சுனாமில இஞ்ச அரவாசிச் சனம் சாகக் காரணமே மண்மேடு எல்லாம் இல்லாம போனதுதான் எண்டுஇ நான் சொல்லித் தான் தெரியோணும் எண்டில்ல.
இந்தத் தலயிடியப் பாத்துஇ கவலப்பட்டுக் கொண்டே கொஞ்சத் தூரம் நடந்தன்.... சிச்சீ....அசிங்கம் புடிச்சதுகள்.... இந்தச் சனங்கள் திருந்தவே மாட்டாதுகள்.....!!!
எனக்குத் தெரிஞ்சிஇ இண்டைக்கு நம்மட ஊரில மலசலகூடம் இல்லாத வீடே இல்ல எண்டுவன். பிறகென்ன மண்ணாங்கட்டிக்கி கடக்கரைய நாறடிக்குதுகள்?? நல்லா காத்து வாங்கிக் கொண்டு 'போறதில' ஒரு சந்தோசமாக்கும்??
இதுகள்ற அநியாயம் காணாது எண்டுஇ கட்டாக்காலி மாடுஇ நாய் எல்லாம் 'போய்' வச்சிருக்குதுகள்.... அங்கங்க குப்பைஇ கல்லுஇ நரகல்களக் கொட்டி – போத்தலுகள்இ அழுகின மீன் – கொடி கிடி எல்லாம் கிடந்து அப்பப்பா.... அடிக்கிற கடக்காத்தையும் மீறிஇ நாத்தம் குடல பிரட்டுது.. ,:(
எண்ட பங்குக்கு கொஞ்சம் ஏரியாவ பாத்து சுத்தம் பண்ணினன்... அதுக்கும் பயம்இ எங்கெங்க 'என்னென்ன' கைல படுதோ எண்டு பயந்து பயந்து தான் இந்த 'திருப்பணி'ய செஞ்சு முடிச்சன். (வீட்ட வந்து ஒரு லைஃபோய் சவுக்காரத்த முடிச்சன் என்றது தனிக்கதை!!!)
கடக்கரை எவ்வளவு அருமையான இயற்கை வளம் எண்டு இந்தச் சனங்களுக்கு விளங்குதில்ல. இதுகள் நினச்சா இந்தக் கடக்கரய எப்பிடி வச்சிருக்கலாம்..... கொழும்புட காலிமுகத்திடலும் தோத்துப்போகும்.
ஒரு நிமிசம் உங்கட மனச்சாட்சிய கேள்வி கேட்டுப் பாருங்கோ.. ஒருதர் நினச்சி ஒண்டும் செய்யேலாது. எல்லாரும் நினச்சா தான் எதையும் சாதிக்கலாம். எப்பாடு பட்டாகிலும் இத நம்மள் செஞ்சே ஆகோணும்!!!
முதலாவதுஇ கடக்கரய நாறடிக்கிற கும்பல ஊர விட்டுத் துரத்தோணும்..... எப்பிடியாவது அவங்களுக்கு எடுத்துசொல்லி விளங்கவச்சிஇ இந்த 'வேலை' செய்யாமல் தடுக்கப் பாருங்கோ!! சிவன் கோயிலுக்கு பக்கத்திலயும் திருக்கோயிலுக்கு பக்கத்திலயும் கொஞ்சம் பொடியன் தரவளி விளையாடிக்கொண்டு நிண்டத கண்ட நான்... அவங்கள் இதுக்கு பூரணமா முயற்சி செய்யலாம்..
தயவு செய்து ஒருதரும் கடக்கரைல குப்பை – கல்லு இதுகள கொட்டவேணாம் – கொட்டவும் விடவேணாம்... ஊரில கனமா அமைப்புகள் இருக்கு தானே! அவங்கள் மாதத்துக்கொருதரமாவதுஇ இதுல கவனமெடுத்து சிரமதானம் ஏற்பாடு செய்யலாம்இ நாலு மாதமும் கனம்... கடக்கரை சும்ம அந்தமாதிரி பளபளக்கும் :)
இந்த பிரதேச சபை என்னத்த தான் பாத்துக் கொண்டிருக்குதோ தெரியல்ல. கிழமைக்கு கிழமை ஊர்வலம் வாற அதுட குப்பை வண்டிய கடக்கரைக்கு அனுப்பினாஇ ரெண்டு நாள்ல கடக்கரை சுத்தமாகுமே!
எல்லாத்தயும் விட கடும் முக்கியம் மண்ணேத்துறது! உங்கள்ட்ட கெஞ்சிக் கேக்கிறன்; என்ன செஞ்சாவது இத நித்தாட்டப் பாருங்கோ... நான் இதில இனி தீவிரம்தான்.. சொந்தபந்தம் எல்லாம் பாக்கப் போறல்ல... ஆராவது மண்ணேத்திறதக் கண்டா உடனே பொலிசுக்குச் சொல்ற எண்டுதான் இருக்கன்!
வீடு கட்ட – சாமான் சக்கடு புக்கடு எண்டுஇ எல்லாத்துக்கும் மண் தேவைதான்.... நான் இல்லண்டு சொல்லல்ல.... ஆனா குறஞ்சபட்சம்இ கலியாணம் – காட்சிக்கி மண்ணேத்துறதையாவது நிப்பாட்டுங்கோஇ வாழ்வு – சாவுக்கெண்டு வாற சனம் மண்ணப் பாக்கப்போறல்லேஇ நம்மட மனசதான் பாக்கும்!
விஞ்ஞானம் வளர்ரதோடஇ மனிசன்ட தேவைகளும் வளருது. அதுக்காக இயற்கைய போதுமான அளவு பாவிக்க நம்மளுக்கும் உரிமை இருக்கு தான். ஆனா எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கோணும்... வரம்பு மீறினமெண்டா இயற்கைர தண்டனைல இருந்து நம்மள் தப்பேலாது!
இப்ப கடக்கரை கிடக்கிற கிடைக்கிஇ 2004 சுனாமி இல்லஇ அதவிட சின்னொரு சுனாமி வந்தாலும்இ கடல் நல்லா ஊருக்குள வந்திரும்.... பிறகு 'விடைகொடு எங்கள் நாடே' எண்டு பாட்டு படிச்சிக் கொண்டு எங்கெண்டான போகவேண்டியதுதான்...! (இது நான் சிரிக்கிறதுக்கு சொல்லல்லஇ உண்மையாவே கவலையோட சொல்றன் :'(
நெஞ்சில கைய வச்சிஇ நீங்களும் கொஞ்சம் யோசிங்கோ! இனியும் மண்ணேத்துறத அப்பிடியே விட்டமெண்டா வாற வருசம் இந்த 'நெற்'றில இந்த கட்டுரை இருக்கும்இ வெளிநாட்டில இருக்கிறவங்கள் அப்பிடியே இருப்பீங்கள்.... ஆனாஇ இஞ்ச ஊரோ சனமோ ஒண்டும் இருக்காது....
அப்பனே சித்திவிநாயகா - சித்திரவேலாயுதா – கண்ணகைத் தாயே நீங்க தான் எல்லாரையும் காப்பாத்தோணும்!!!
- ஊரான்.
---



Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!