யுத்தம் காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு சாகாமம்,காஞ்சிரங்குடா,கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு பிரக்ரிக்கல் அக்சன் நிறுவனத்தின் அனுசரனணயுடன் இந்திய அரசின் உதவியுடன் இந்திய குஜராத் மாநிலத்தில் இயங்கும் சேவா நிறுவனத்தின் பண உதவியுடன் இக் கிராமங்களுக்கு
ஆயிரம் (1000) வீடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தினை பற்றி மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக பிரக்ரிக்கல் அக்சன் நிறுவனத்தின் முகாமையாளர் விசாக்கா கிடலகே அவர்களும், இந்திய குஜராத் மாநிலத்தில் இயங்கும் சேவா நிறுவனத்தின் தலைவியுமான உமாதேவி அவர்களும் ,இந்திய தூதரக அதிகாரிகளும் 2012 - 01 - 31 ஆம் திகதி கலந்து கொண்டனர். இவ் வீடு கட்டுவதற்கான பணம் வீட்டுத்தலைவரின் பெயரில் வங்கியில் இடப்படும்.






Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!