Contact Form

Name

Email *

Message *

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஐவருக்கு தண்டப்பணம் விதிப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோமான முறையில் மதுபானம் விற்பனை செய்த 5 பேருக்கு தண்டப்பணமாக 50 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆ.ஈ.அலெக்ஸ்ராஜா …

Image
திருக்கோவில் பிரதேசத்தில் சட்டவிரோமான முறையில் மதுபானம் விற்பனை செய்த 5 பேருக்கு தண்டப்பணமாக 50 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு பொத்துவில் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆ.ஈ.அலெக்ஸ்ராஜா இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

தம்பிலுவில், விநாயகபுரம், திருக்கோவில் பிரதேசங்களில் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் சாராயம், பியர் ஆகிய மதுபானங்களை விற்பனை செய்த 5பேரை நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று புதன்கிழமை பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஆ.ஈ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இவர்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணம் செலுத்துமாறும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாதகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
---

You may like these posts

Comments