திருக்கோவில் பிரதேச மக்கள் புதிதாக மின் இணைப்பைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கு 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள
அக்கரைப்பற்று மின்சார சபை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளதால் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.தமது பிரதேசத்தில் மின்சார சபையின் உப அலுவலகம் ஒன்று இயங்குகின்ற போதும் இவ் விண்ணப்பப் படிவத்தை அங்கு வழங்காமல் இருப்பது ஏனெனவும் இப் பிரதேச மக்கள் இவ்விண்ணபடிவத்தை பெறுவதற்காக அக்கரைப்பற்று சென்று வர 150 ரூபாவுக்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் மின் இணைப்பை பெறும் வீட்டு உரிமையாளர்களுக்கே படிவம் வழங்கப்படுவதால் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இந் நடைமுறை காரணமாக பலர் சட்ட விரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.எனவே இவ் விண்ணப்பப்படிவத்தை அப் பிரதேசத்திலேயே பெறுவதற்கு மின்சார சபை ஏற்பாடு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!