Contact Form

Name

Email *

Message *

தொழிலாளர் ஒற்றுமைக்கு பலம் சேர்க்கும் மேதினம்

உலகில் வாழுகின்ற தொழிலாளர் சமூகத்தினால் இன்று உலக தொழிலாளர் தினம் கொண் டாடப்படுகின்றது. வருடம் முழுவதும் வியர்வை சிந்தி தொழில்புரியும் தொழிலாளி இன்றைய தினத்தில் எல்லாவற்றையும…

Image
உலகில் வாழுகின்ற தொழிலாளர் சமூகத்தினால் இன்று உலக தொழிலாளர் தினம் கொண் டாடப்படுகின்றது. வருடம் முழுவதும் வியர்வை சிந்தி தொழில்புரியும் தொழிலாளி இன்றைய தினத்தில் எல்லாவற்றையும் மறந்து மிகவும் குதூகலமாக தனக்குரிய தினமாக நினைத்து கொண்டாடும் ஒரு நாளாக இந்த மே தினம் அனுஷ்டிக்கப் படுகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் தொழிலாளர் தினத்தை முன்னின்று கொண்டாடுவ தில் தொழிற்சங்கங்கள் தொழிலாளருக்கு உறுதுணையாக நிற்பதனைக் காணமுடிகி றது. ஒவ்வொரு தொழிற்துறையிலும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தம்மை ஏதோ ஒரு தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர்.

இன்று மே தினமாகும்.அதாவது தொழிலார் தினமாகும்.1889ல் உலக சோஷலிச காங்கிரஸ் கட்சியினர்
பாரிஸில் ஒன்று கூடி,அமெரிக்க தொழிற்கட்சியின் 'எட்டுமணி நேர வேலை' என்ற கோரிக்கைக்கு
ஆதரவாக வாக்களித்ததால்,தொழிலாளர் தினமாக இத் தினம் உருவெடுத்தது.1890 ஆண்டு மே மாதம்
முதலாம் திகதி தொழிலாளர் தினமாக' மே தினம்' பிரகடனப் படுத்தப்பட்டு இன்றுவரை கொண்டாடப்படுகின்றது.

உழைப்பாளிகளின் தினமாக,விடுமுறை தினமாக இது உலகம் முழுதும் அனுட்டிக்கப்படுகிறது.
தொழிலாளர்களின் கஷ்டங்கள்,கோரிக்கைகள்,இத்தினத்தில் வலியுறுத்தப்பட்டுவந்தன.இதற்காக
தொழிலாளர் யூனியன்,தொழிலாளர் சம்மேளனம்,தொழிலாளர் கட்சிகள் என்று பலதரப்பட்ட
அமைப்புகள் இத்தினத்தில் பேரணியாக வீதி வலம் சென்று தங்களின் கோரிக்கைகளை
அரசுக்கும்,அரசுசார்ந்த அமைப்புகளுக்கும் முன் வைப்பார்கள்.

உழைப்புக்கு மதிப்புக்கொடுத்து,உழைப்பை மட்டும் நம்பி முயற்சி என்னும் ஆற்றில் குதித்து
வெற்றி என்னும் கடலை நோக்கிய பயணத்தை அடையத்துடிக்கும் தினமாக காலம் காலமாக
கொண்டாடப்பட்டுவந்த இத்தினம்,நாளடைவில் வேறுவிதமாக உருமாறியது வேதனைக்குரிய
விடயமாகும்.இத்தினத்தின் நோக்கத்தையும்,வடிவத்தையும் மாற்றிய அரசியல் கட்சிகள்
தங்களின் எதிர் கட்சிகளையும்,எதிராளிகளையும் குறிவைத்து தனிப்பட்ட விரோதங்களையும்
காழ்ப்புணர்ச்சிகளையும் ஒருவர்மேல் ஒருவர் கொட்டித் தீர்பதற்காக இத் தினத்தை பாவிக்கத்
தொடங்கினார்கள் என்று சொல்லலாம்.
வாழ்க்கை முழுதும் உழைத்து, உழைத்து ஓடாய்ப்போன தொழிலார் வர்க்கத்தின் துன்பங்கள்,
துயரங்கள் ஆகியவற்றை மறந்து அரசியல் கட்சிகளின் வக்கிரங்களை வாரிவழங்கும் தினமாக
இத் தினம் மாறியது கொடுமையாகும்.எதிர் வரும் காலங்களிலாவது இத் தினம் தனது
உண்மையான வடிவத்தை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது..

-கோவிலூர் செல்வராஜன் 

You may like these posts

Comments