Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த கொள்ளைக்கோஷ்டி சிக்கியது! ஆயுதங்களும் மீட்பு

திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீடு ஒன்றில் துப்பாக்கி முனையில் 7 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த மூவரை துப்பாக்க…

Image

திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீடு ஒன்றில் துப்பாக்கி முனையில் 7 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த மூவரை துப்பாக்கியுடன் நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமந்த எதிரசூரிய தெரிவித்தார்;
விநாயகபுரம் கிராம வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஜனவரி 9ம் திகதி இரவு 9 மணியளவில் நான்கு பேர் துப்பாக்கியுடன் வீட்டினுள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி 7 லட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து சென்றனர்.
இக் கொள்ளை தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து கோமாரி பிரதேசத்தில் வைத்து மூவரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து ரி.56 ரக துப்பாக்கி ஒன்றும் மகசீன் ஒன்று 23 துப்பாக்கி ரவைகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டர் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமந்த எதிரசூரியவின் பணிப்புரைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜ.பி போப்பநந்த தலைமையிலான 6 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர்; இக் கொள்ளையர்களை கைது செய்யும் நடைவடிக்கையில் ஈடுபட்டனர்.
இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் கோமாரி பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் கடந்த காலத்தில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாகியுள்ளார் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You may like these posts

Comments