Contact Form

Name

Email *

Message *

புதிதாக ஆரம்பித்த திருக்கோவில் கல்வி வலய அதிபர், ஆசிரியர்களின் சேவைகள் பாதிப்பு

திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழுள்ள ஆசிரியர்கள்,அதிபர்கள் வலயக்கல்விப்பணிமனையில் தமது சேவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வைப்பெற முடியாமல் பெரிதும் பாதிக்க…

Image
திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழுள்ள ஆசிரியர்கள்,அதிபர்கள் வலயக்கல்விப்பணிமனையில் தமது சேவைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வைப்பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தனிடம் முறையிட்டுள்ளனர்
இக்கல்வி வலயம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியுள்ள நிலையில் இக்கல்விக்காரியாலயத்தில் ஆசிரியர்கள் சேவையில் பதவி உயர்வு பெறுவதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அவை வழங்கப்படாமல் கல்வி அதிகாரியின் மேசையில் குவிந்து கிடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆசிரியர்களுக்கு உரிய காலத்தில் கிடைக்கக்கூடிய பல பதவியுயர்வுகள் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கல்விப்பணிமனையில் கல்விப்பணிப்பாளர் உட்பட 4 பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் கடமையாற்றி வருகின்ற போதிலும் அதிபர், ஆசிரியர்கள் முக்கியமான அவசரமான தேவைகளுக்கு சென்றால் குறித்த அதிகாரிகள் எவருமே அலுவலகத்தில் கடமையில் இருப்பது குறைவாகவே உள்ளது.

வலயக்கல்விநப் பணிப்பாளர் விடுமுறையில் செல்கின்ற போது பதில் கடமை ஒழுங்குகள் போன்றவை செய்யப்படாததால் ஆசிரியர்கள், அதிபர்கள் பல அவசியமான அவசரமான தமது தேவைகளை நிறைவேற்றமுடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இம்முறைப்பாடு தொடர்பாக மாகாண கல்விப்பணிப்பாளரின் கவனத்திற்கு சந்திரகாந்தன் கொண்டுவந்துள்ளதாக தெரிவித்தார்

You may like these posts

Comments