Contact Form

Name

Email *

Message *

அக்கரைப்பற்று மற்றும் தம்பிலுவிலில் இயங்கி வந்த தொலைகாட்சி நிலையம் முற்றுகை

அம்பாறை அக்கரைப்பற்று. மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் இரண்டை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிசார் முற்று…

Image

அம்பாறை அக்கரைப்பற்று. மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் இரண்டை நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொலிசார் முற்றுகையிட்டு இருவரை கைத செய்துள்ளதுடன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சாதனங்களையும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அம்பாறை விசேட பொலிஸ்குழுவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சோப சஞ்சீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.சம்பவதினம் இரவு 10 மணிக்கு அக்கரைப்பற்று முதலாம் பிரிவு பழைய பொலிஸ் நிலைய வீதியிலும், திருக்கோவில தம்பிலுவில் வில்லியம்பிள்ளை வீதியிலும் இயங்கிவந்த இவ்விரு சட்டவிரோதமான தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்களை முற்றுகையிட்டு இருவரைக் கைது செய்துள்ளதடன் பல இலட்சம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சி ஒளிபரப்பு சாதனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை எதிர்வரும் 28ம் திகதி அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விசாரணைகளை அம்பாறை பொலிசார் மேற்கொண்டு வருவதாக அம்பாறை விசேட பொலிஸ்குழுவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசேதகர் சோப சஞ்சீவ தெரிவித்தார்

You may like these posts

Comments