திருக்கோவில் பிரதேசத்தில் இன்று காலை மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் இரண்டு மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
திருக்கோயில் பிரதேசத்தைச் சோ்ந்த மீனவர்களான சின்னத்தம்பி தணிகாசலம் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரே அவ்வாறு உயிரிழந்துள்ளனர். தற்போதைக்கு ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோயில் பொலிசார் அறிவித்துள்ளனர்.
தணிகாசலம் என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணனின் சடலத்தைத் தேடும் பணி தொடர்வதாக பிரதேசவாசிகள் எமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இருவரும் தலா நான்கு பிள்ளைகளின் தகப்பன்மார் என்பதாகவும் மேலதிக விபரங்கள் தெரிவிக்கின்றன

Comments
இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!