Contact Form

Name

Email *

Message *

திருக்கோவிலில் சமுர்த்தி நிவாரணங்களை வங்கி மூலம் பணமாக வழங்க நடவடிக்கை

திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி நன்மைபெறும் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் இவ்வருடம் தொடக்கம் மாதாந்தம் சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ள…

Image

திருக்கோவில் பிரதேசத்தில் சமுர்த்தி நன்மைபெறும் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் இவ்வருடம் தொடக்கம் மாதாந்தம் சமுர்த்தி வங்கிகள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.அழகரெட்ணம் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் சமுர்த்தி நன்மைபெறும் 4850 குடும்பங்கள் சமுர்த்தி முத்திரைக்கான உலர்உணவுப் பொருட்களை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகப் பெற்று வந்தனர். கடந்த சில காலமாக முத்திரைக்கான உலர்உணவுப் பொருட்களை உரிய வேளையில் வழங்காதது மற்றும் பல்வேறு நடவடிக்கைகளினால் சமுர்த்தி நன்மைபெறும் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன.

இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து சமுர்த்தி முத்திரை பெறும் குடும்பங்களின் நலன்கருதி அவர்களின் முத்திரையின் புள்ளிக்கான உலர்உணவுப் பொருட்களை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் மூலம் வழங்குவதற்குப் பதிலாக அம்முத்திரைப் புள்ளிகளுக்கான பணத்தை மாதாந்தம் சமுர்த்தி வங்கி மூலமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, சமுர்த்தி நன்மை பெறும் குடும்பங்கள் ஜனவரி மாதத்தில் இருந்து இவ்வருடத்திற்கான முத்திரைப் புள்ளிக்கான பணத்தைப் பிரதேசத்தில் உள்ள இரண்டு சமுர்த்தி வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை, முத்திரைக்கான பணத்தைப் பெற விரும்புவோர் பெற்றுக்கொள்வதுடன்,சமுர்த்தி வங்கியில் இப்பணத்தை விரும்புவோர் சேமிப்பில் வைக்க முடியும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்

You may like these posts

Comments